சினிமாவை பொறுத்தவரைக்கும் வளரும் இளம் தலைமுறை நடிகர்கள் பல பேர் யாரையாவது ஒரு மூத்த நடிகரையோ அல்லது அவர்களுக்கு பிடித்தமான நடிகரையோ இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் சினிமாவிற்குள் வருகின்றனர்.
சத்யராஜை எடுத்துக்கொண்டால் எம்ஜிஆரின் பைத்தியம் என்றே சொல்லலாம். அதே போல் ரஜினியையும் பல பேர் தங்கள் தலைவராகவே பாவித்து நடிக்க வருகின்றனர். இன்னும் ஒரு படி மேலாக அவர்கள் நடிக்கும் போது கூட அந்த இன்ஸ்பிரேஷனில் அவர்களின் பிரதிபலிப்பும் வந்து விடும்.
இதையும் படிங்க : என்னோட வேற முகத்தை லியோ படத்தில் பார்ப்பீங்க… சூப்பர் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
இந்த நிலையில் சிவாஜி யாரோட இன்ஸ்பிரேஷனில் நடிக்க வந்தார் என்பதை சத்யராஜ் அறிய முற்பட்டார். ஒரு சமயம் படப்பிடிப்பிற்காக வந்த சிவாஜியிடம் சத்யராஜ் அந்த கேள்வியையும் கேட்டிருக்கிறார். உங்களுக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக எந்த நடிகரும் இருந்திருக்கிறார்களா? என கேட்டார்.
அதற்கு சிவாஜி ஏன் என் நடிப்பில் யாரையும் பார்த்தீயா என கேட்டு எனக்கு என் வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான நடிகர் யாரென்றால் அது எம்.ஆர்.ராதா மட்டுமே என்று பதிலளித்தாராம். இவர் கூறியதில் இருந்தே சத்யராஜ் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது என சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : கடன் பிரச்னையால் முடங்கிய அயலான்… படத்தின் கதையும் இணையத்தில் கசிந்ததா?
சினிமாவில் சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் ஒன்றாக பயணித்தவர்கள் என்ற அடிப்படையில் சிவாஜி இந்த பதிலை கூறியிருப்பார் என்று வைத்துக் கொண்டாலும் மலையாள நடிகர் மோகன்லாலிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது.
அவரும் சினிமாவில் எனக்கு பிடித்தமான ஒரே நடிகர் எம்.ஆர்.ராதா மட்டுமே என்ற பதிலையும் கூறியிருக்கிறார். ஆக பல பேருக்கு தெரிந்தோ தெரியாமலோ எம்.ஆர்.ராதா ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…