பொறந்தா சினிமாக்காரனா பொறக்கணும்டா… ஜெய்சங்கரைப் பார்த்து பல்பு வாங்கிய சத்யராஜ்

jaisankar, sathyaraj
Sathyaraj: தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். இவர் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும். செயற்கைத்தனம் இருக்காது. மிகையில்லாமல் இருக்கும். ஸ்மார்ட் லுக்குடன் ரசிகர்களை அசத்துவார். ஹாலிவுட் படப் பாணியில் இவரது படங்கள் பெரும்பாலும் துப்பறியும் விதத்தில் இருக்கும். சிஐடி சங்கர் படத்தில் இவர் அருமையாக நடித்திருப்பார்.
இன்னும் பல படங்களைச் சொல்லலாம். அந்த வகையில்தான் இவர் ஜேம்ஸ்பாண்டு மாதிரி தொடர்ந்து துப்பறியும் படங்களில் நடித்ததால் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்று அழைக்கப்பட்டார். கமல், ரஜினி ஆகியோருடனும் ஜெய்சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் பற்றிய நினைவலைகளைப் பிரபல நடிகர் சத்யராஜ் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
ஜெய்சங்கர் எல்லாரிடமும் ரொம்ப நல்லா பழகுவார். அவரை 1965 பொங்கலுக்கு இரவும் பகலும் தான் முதல் படம். அப்போ எம்ஜிஆரின் எங்கவீட்டுப் பிள்ளை ரிலீஸ். சிவாஜியின் பழனி படமும் ரிலீஸ். இதுக்கு இடையில ஜெய்சங்கர் முதல்ல நடிச்ச இரவும் பகலும் படமும் ரிலீஸ். எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு இடையில் சத்யராஜோட இந்தப் படமும் 100 நாள் ஓடுனது.

ஒரு தடவை கோவைல நான் 7வது படிக்கும்போது எங்க பேமிலி டாக்டர் நாராயணன் வீட்டுக்கு ஜெய்சங்கர் வந்தாரு. வெளியே நிறைய கூட்டம். நான்தான் ரெகமண்ட் பண்ணி எல்லாத்துக்கும் ஆட்டோகிராப் வாங்கிக் கொடுத்தேன். அப்போ அங்கே டாக்டர் நாராயணன் சார் வீட்டுக்;கு ரெண்டு மூணு தடவை ஜெய்சங்கர் சார் வந்துருக்காரு.
ஒரு தடவை வேக்ஸல் கார், ஒரு தடவை பியட் கார், ஒரு தடவை அம்பாசிடர் கார்ல வந்தாரு. நான் கூட சொல்வேன். பொறந்தா சினிமாக்காரனா பொறக்கணும்டா. சினிமாவுக்கு வந்து 2 வருஷத்துல மூணு கார் வாங்கிட்டாருன்னு சொன்னேன். பின்னாடி அவரு கூட நடிக்கும்போதுதான் சத்யராஜ் இதுபற்றி நினைவுபடுத்த, ஜெய்சங்கர் சொன்னாராம். 'நீங்க வேற சத்யராஜூ… எல்லாமே என் ப்ரண்டோட காரு'ன்னு… சொல்லி சிரிக்கிறார் சத்யராஜ்.