தமிழ் சினிமாவில் அரசியல் சம்பந்தமான பல படங்களில் மிகப்பெரிய உதவியாக இருந்தவர் இயக்குனர் லியாகத் அலிகான்.ஒரு எழுத்தாளராக இயக்குனராக வசன கர்த்தாவாக பல படங்களில் தன் திறமையை காட்டியவர். பெரும்பாலும் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அது மட்டுமில்லாமல் ஆர்.கே.செல்வமணிக்கும் இவருக்கும் இடையே நல்ல நட்புறவும் இருந்திருக்கிறது.
இயக்குனராக வேண்டும் என ஆசையில் முதலில் பல படங்களுக்கு எழுத்தாளராகவும் வசனகர்த்தாகவும் பணிபுரிந்திருக்கிறார் லியாகத் அலிகான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் எடுத்த ‘கட்டளை’ திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை எடுத்தூக் கூறினார்.
முதலில் படம் ஆரம்பிக்கும் போது கட்டளை படத்தில் சத்யராஜ் , பானுப்ரியா நடிப்பில் லியாகத் அலி இயக்கத்தில் பாலு என்பவர் தயாரிப்பில்தான் இப்படம் உருவாகவிருந்தது. ஆனால் வினியோகஸ்தரர்கள் அந்த நேரத்தில் ஒரு வளரும் நடிகையாக இருந்த ரோஜா நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளரிடம் கூறியிருக்கின்றனர்.
உடனே தயாரிப்பாளரும் லியாகத் அலிகானும் ரோஜாவிடமும் செல்வமணியிடம் கதையை பற்றி ஆலோசனை செய்து ஒகே செய்து விட்டனராம். மேலும், அடுத்தநாள் பேப்பரில் இந்த செய்தியை வெளியிடவும் ஏற்பாடு செய்து விட்டனராம்.
மேலும், தயரிப்பாளர் பாலு லியாகத் அலிகானிடம் ‘இதை உடனே சத்யராஜிடம் தெரியப்படுத்தி நடந்த விபரத்தை சொல்லி சமாதானப்படுத்துங்கள்.. நாளைக்கு பத்திரிக்கையில் ஹீரோயின் மாற்றிய சம்பவம் தெரிந்தால் கோபப்படுவார்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
லியாகத் அலிகான் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜை சந்தித்து நடந்த அனைத்து விபரங்களையும் கூற அதற்கு சத்யராஜ் ‘முதலில் இந்த கதைக்கு பானுப்ரியா தான் சரியா இருப்பார் என்று நினைத்துதானே பானுப்ரியாவை ஓகே செய்தீர்கள், ஆனால் திடீரென ரோஜாவை போடுவது சரியா? என கோபமடைந்தாராம்.
இதையும் படிங்க : அஜித் படத்தில் நடிக்க எம்.எஸ்.வி போட்ட 2 கண்டிஷன்கள்.. செம கில்லாடிதான்!..
அடுத்தநாள் பானுப்ரியாவின் சகோதரரான கோபி லியாகத் அலிகானை தொடர்பு கொண்டு ‘சார் கட்டளை படத்தை நாம தான் பண்ண போகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். அதாவது, கதாநாயகியை மாற்றியதால் கோபமடைந்த சத்தியராஜ் தயாரிப்பாளரையே மாற்றிவிட்டார் என்பது லியாகத் அலிகானுக்கு அப்போதுதான் புரிந்துள்ளது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…