ஹோட்டலில் பரோட்டா போட்டேன்! ‘சாட்டை’ பட நாயகனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Sattai movie: சமுத்திரக்கனி இயக்கி நடித்த திரைப்படம் சாட்டை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமுத்திரக்கனி இந்தப் படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக வந்து பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியிருப்பார்.

படம் பார்த்த அனைவரும் ச்ச இப்படி ஒரு வாத்தியார் நம் வாழ்க்கையில் வரவில்லையே என்று ஏங்க வைத்திருப்பார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மகிமா நம்பியார். அறிவழகி என்ற கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருப்பார்.

இதையும் படிங்க: விஜய்க்கு பெர்சனலா ஒன்னு சொல்லனும்! கட்சி பெயரை அறிவித்ததும் தாய் ஷோபா அனுப்பிய ஆடியோ

அதே போல் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் யுவன். ஒரு முரட்டுத்தனமான மாணவனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பார். ஆனால் மகிமா நம்பியார் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ஒரு வளரும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

ஆனால அவருக்கு ஜோடியாக நடித்த யுவனை அதன் பிறகு எந்தப் படங்களிலும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் யுவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவருடைய நிலையை எடுத்துக் கூறினார். சாட்டை படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு யுவனுக்கு கிடைத்ததாம்.

இதையும் படிங்க : காலம் என்னை கொண்டு போகும்!… அரசியல் குறித்து விஜய் அப்போதே இப்படி பேசி இருக்காருப்பா!.. உண்மை தான் போல

அந்தப் படத்தில் பரோட்டா போடும் மாஸ்டர் கதாபாத்திரமாம். அதற்காக நாகர்கோயில் சென்று அங்கு பரோட்டா கடையில் கிட்டத்தட்ட 10 நாள்கள் தான் யார் என்றே சொல்லாம வேலையில் சேரும் மாதிரி ஒரு பரோட்டா கடையில் வேலைக்கு சேர்ந்தாராம்.

ஆனால் பாலாவின் அந்தப் படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம். அதில் லீடு ரோலில் நடிக்க இருந்தாராம் யுவன். அதன் பிறகு அவரே சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டாராம். மறுபடியும் ஒரு புதுப்பொலிவுடன் கோடம்பாக்கம் நுழைந்திருக்கிறார் யுவன்.

இதையும் படிங்க: 1972 முதல் 2024 வரை.. கட்சி ஆரம்பித்த நடிகர்கள்! எல்லாரையும் நம்பியாச்சு.. இவரையும் நம்புவோம்

 

Related Articles

Next Story