Connect with us

அன்னைக்கே வடிவேலு சோலியை முடிச்சிருப்பேன்.. சீறும் சிசர் மனோகர்!.. நடந்தது இதுதான்…

sisar

Cinema News

அன்னைக்கே வடிவேலு சோலியை முடிச்சிருப்பேன்.. சீறும் சிசர் மனோகர்!.. நடந்தது இதுதான்…

தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட காமெடி நடிகராக இல்லை என்றாலும், ஓரளவு ரசிகர்களிடையே பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் சிஸ்ஸர் மனோகர். இவர் தொடக்கத்தில் ராஜ்கிரணின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது வடிவேலு இவரிடம் உதவியாளராக இருந்தாராம்.

Scissor Manohar

Scissor Manohar

அதன் பின் வடிவேலு, மிகப் பெரிய காமெடி நடிகராக வலம் வந்தபோது சிஸ்ஸர் மனோகருக்கும் வடிவேலுவுக்கு மிகப் பெரிய பிரச்சனை எழுந்திருக்கிறது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சிஸ்ஸர் மனோகர் மிகவும் கோபத்தோடு பேசியுள்ளார்.

அதாவது ராஜ்கிரண் தயாரிப்பு நிறுவனத்தில் சிஸ்ஸர் மனோகர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது வடிவேலு அவருக்கு உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தாராம். அதன் பின் வடிவேலு ராஜ்கிரணின் “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அப்போது வடிவேலுவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தாராம் சிஸ்ஸர் மனோகர்.

Vadivelu

Vadivelu

மேலும் வடிவேலுவுக்கு “தேவர் மகன்” போன்ற திரைப்படங்களில் இருந்து வாய்ப்பு வந்த காலகட்டத்தில் வடிவேலுவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வாராம் மனோகர்.

எனினும் இதனை தொடர்ந்து வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்துவிட்ட பிறகு சிஸ்ஸர் மனோகரின் வாய்ப்புகளை தடுத்தாராம். குறிப்பாக “பகவதி” திரைப்படத்தில் வடிவேலுவுக்கு இணையான ஒரு காமெடி ரோல் இருந்ததாம். அந்த வாய்ப்பையும் வடிவேலுதான் கெடுத்துவிட்டாராம்.

Scissor Manohar

Scissor Manohar

இது குறித்து சிஸ்ஸர் மனோகர் அப்பேட்டியில் கூறியபோது, “நான் ஒரு மிகப்பெரிய கோபக்காரன். பகவதி படத்தில் வடிவேலு இப்படி நமக்கு செய்துவிட்டார் என்றபோது கடும் கோபம் வந்தது. எனக்கு பெண் குழந்தைகள் மட்டும் இல்லை என்றால் அன்றைக்கே வடிவேலுவின் கதையை முடித்துவிட்டிருப்பேன். நாம் வளர்த்துவிட்ட ஆள், நமக்கு இப்படி செய்தால் எவ்வளவு கோபம் வரும்.

அதன் பின் சீமான், என்னிடம் வடிவேலுவை பற்றி பேச வேண்டாம் என முடித்துவைத்தார். அதன் பின் நான் வடிவேலுவுடன் நடிக்கவே இல்லை. ஆனால் இம்சை அரசன் படத்தில் இளவரசு கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியது. சிம்பு தேவன் முதலில் அப்படித்தான் எழுதியிருந்தார். ஆனால் வடிவேலு என்னை அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க விடவில்லை. அதில் ஒரு சிறு கதாப்பாத்திரமே நடித்திருந்தேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துறவு வாழ்க்கையை வாழ முடிவெடுத்த ரஜினிகாந்த்… தீக்குளிக்க முயன்ற ரசிகர்கள்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top