·

வடிவேலுவை கோவை சரளா புரட்டி எடுத்ததுக்கு காரணம் இதுதான்!.. ரகசியம் சொன்ன இயக்குனர்…

ஆக்சன் படங்கள், ‘நகைச்சுவை’ படங்கள், ‘திகில்’ படங்கள், ‘கருத்து’ படங்கள் என தமிழ் சினிமா கதை அம்சத்தில் பல விதமாக பயணித்து வந்து கொண்டிருக்கிறது. குடும்பப் பாங்கான கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து. அதனை ரசிகர்களை பார்க்க வைத்து, அவர்களுக்கு திருப்தி…

vadivelu

ஆக்சன் படங்கள், ‘நகைச்சுவை’ படங்கள், ‘திகில்’ படங்கள், ‘கருத்து’ படங்கள் என தமிழ் சினிமா கதை அம்சத்தில் பல விதமாக பயணித்து வந்து கொண்டிருக்கிறது. குடும்பப் பாங்கான கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து. அதனை ரசிகர்களை பார்க்க வைத்து, அவர்களுக்கு திருப்தி கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் சிலர் மட்டுமே.

இப்படி வெற்றி பெற்ற இயக்குனர்களின் வரிசையில் முக்கியமான இடம் பிடித்தவர் இயக்குனர் வி.சேகர். குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒருவருக்கு ஒருவர் எப்படி விட்டுக்கொடுத்து சென்றால் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதனையே தனது கதை அம்சமாக கொடுத்து, அதற்கு ஏற்றார் போல திரைக்கதையையும் எழுதி வெற்றி கண்டவர்.

kvs
kvs

 

அதே வேளையில் இவரது படங்களில் நகைச்சுவைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வந்தது. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, “கோவை” சரளா, எஸ்.வீ.சேகர் என நகைச்சுவைக்கு பெயர் பெற்ற முக்கிய நடிகர்களுக்கு அதிகமாக இவர் படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இவரது படங்களில் அதிகமாக “கோவை”சரளாவிடம், வடிவேலு அடி வாங்குவது போல காட்சிகள் இடம் பெற்றது. அவை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இந்த ஜோடி படத்தில் நடித்திருக்கிறார்கள் என பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படை எடுத்து சென்ற ரசிகர்களே அந்த நாட்களில் அதிகம்.

vs
vs

பெண்ணிடம், ஆண் அடி வாங்குவது, அதை வைத்து நகைச்சுவை இந்த “ஐடியா” தனக்கு எப்படி வந்தது என்பதனை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வி.சேகர். சிவபக்தரான இவர் ஒருமுறை காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கிருந்த ‘விக்ரகம்’ ஒன்றில் அம்பாள் ஆக்ரோஷமாக ஒரு ஆணை தனது காலுக்கு கீழே போட்டு மிதப்பதை பார்த்திருக்கிறார்.

இந்த காட்சியை தனது படத்தில் வைக்கலாம் என்று, அதனையும் நகைச்சுவையாக சொல்லலாம் என்ற சிந்தனையும் கிடைத்ததாம். இதில் வடிவேலுவையும், கோவை சரளாவையும் இடம் பெறச்செய்யலாம் என யோசிக்க அது வரவேற்பையும் பெற்றுத்தந்தாம். இந்த சுவாரசிய பின்னணி தகவலோடு தனது ஆரம்பகால நாட்களில் தனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் கவுண்டமணி எனவும் சொல்லியிருக்கிறார்.