Cinema History
Janagaraj: ஜனகராஜோட அந்த வெடிச்சிரிப்புக்கு காரணம் யாருன்னு தெரியுமா? அடடே அவர்தானா..?!
தமிழ்சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளில் பல நடிகர்கள் வந்து போகின்றனர். ஆனாலும் குறிப்பிடத்தக்கவர்கள் தான் நம் நினைவில் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் ஜனகராஜ்.
கமல், ரஜினி, சத்யராஜ், பிரபுன்னு பல ஹீரோக்களுடன் நடித்து 80ஸ் காலகட்டத்தில் தனியாளாக நின்று காமெடியில் கலக்கியவர் தான் ஜனகராஜ். அவரோட சிரிப்பின் ரகசியத்தைப் பற்றிப் பார்ப்போம்.
Also read: Nepoleon: அவனோட கனவு எங்களுக்கு முக்கியம்!… மருமகள் சொன்ன அந்த வார்த்தை!… எமோஷனலான நெப்போலியன்..!
பாடி லாங்குவேஜ்
ஜனகராஜ் நடிச்சாருன்னாலே அந்தப் படங்களில் காமெடி களைகட்டும். அதிலும் அவர் சிரிக்கும் சிரிப்பு மாதிரி வேறு எந்த நடிகருக்கும் வராது. ஒரு கண்ணை மூடிக்கொண்டு அடிவயிற்றில் இருந்து பீறிக்கொண்டு வரும் அவரது சிரிப்பைப் பார்க்கும் போது சிரிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. வித்தியாசமான பாடி லாங்குவேஜ் உடன் அவர் குரலிலும் மாடுலேஷன் கலந்து காமெடி பண்ணும்போது நம்மை அறியாமல் சிரிப்பு வந்துவிடும்.
குறிப்பாக நெத்தி அடி, பாண்டியன், கேளடி கண்மணி, அருணாச்சலம், அபூர்வ சகோதரர்கள், அண்ணாமலை, வீரா படங்களில் ஜனகராஜின் காமெடி செம மாஸாக இருக்கும். அதிலும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ஜனகராஜ் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத கேரக்டர் போல தனது கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார்.
அபூர்வ சகோதரர்கள்
ஒவ்வொரு முறை அவர் துப்பு துலக்கும்போதும் அவரது கணிப்பு தவறி விடும். ஆரம்பத்தில் நல்லா தான் போகும். ஆனால் அது முடியும்போது தவறாக இருக்கும். அதைப் பார்க்கும்போது ரொம்பவே ரசிக்க வைக்கும். 1989ல் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட 3 கேரக்டர்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்.
இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டராக ஜனகராஜ் வருவார். அவருடன் அவரை உசுப்பி விடும் கேரக்டராகவும் ஒத்து ஊதுபவராகவும் கான்ஸ்டபிள் சம்பந்தமாக ஆர்.எஸ்.சிவாஜி நடித்திருப்பார். இடைவேளைக்குப் பிறகு இவர்கள் வரும் காட்சி எல்லாமே படுமாஸாகத் தான் இருக்கும். காமெடியில் தெறிக்க விடுவார் ஜனகராஜ்.
ஜனகராஜின் சிரிப்பு
Also read: Vijay: ரசிகன் படத்தோட அந்தக் குளியலறைக் காட்சி… எங்கேருந்து சுட்டாங்கன்னு தெரியுமா?
ஓபனிங்கில் அவர் நடந்து வரும்போதே கல் தடுக்கி கீழே விழுந்து விட்டு ஸ்டைலாக விழுந்தது தெரியாமல் போஸ் கொடுத்துக் கொண்டு இருப்பார். அந்த வகையில் ஜனகராஜின் சிரிப்பும் அலாதியானது. அவரது பிளஸ் பாயிண்ட்டே அதுதான். அது எப்படி உருவானதுன்னு அவரே சொல்கிறார் பாருங்க.
அது என்னுடைய இயற்கையான சிரிப்பு கிடையாது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் தான் என்னை அப்படி சிரிக்க சொன்னார். நாளடைவில் எல்லா படத்திலும் அதுவே என்னுடைய சிரிப்பாக மாறிவிட்டது என்கிறார் ஜனகராஜ்.