எம்ஜிஆர் தொப்பி அணிந்தது ஏன்னு தெரியுமா? கேள்வி கேட்ட நிருபருக்கு நெத்தியடி பதில்!

Published On: April 15, 2025
| Posted By : sankaran v
mgr with cap

MGR: ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எம்ஜிஆரை நிருபர் ஒருவருக்குக் கேள்வி கேட்கின்ற வாய்ப்பு கிடைத்தது. ‘நீங்க தொடர்ந்து தலையில தொப்பி அணிந்து கொண்டே இருக்கிறீங்களே. அதுக்கு என்ன காரணம்?’னு கேட்டார் ஒரு நிருபர். ஆனால் அவர் கேள்வி கேட்க வந்த நோக்கமே வேறு. ‘உங்க தலையில முடி இல்லையா? அதனாலதான் தொப்பி அணிகிறீர்களா?’ என்று தான் கேட்க வந்தார். ஆனால் அதை நாசூக்காக இப்படி கேட்டுவிட்டார். இதைப் புரிந்து கொண்ட எம்ஜிஆர் அதற்கு அவருக்கு உரைக்கும்படி பதில் சொன்னார்.

நான் என்ன செய்தாலும் விமர்சிப்பதை சிலர் வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஜிப்பா போட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் முழுக்கை சட்டை போட ஆரம்பித்தேன். ஒரு கால கட்டத்திலே கொஞ்சம் முழுக்கை சட்டை சவுரியமாக இல்லாததால கையை மடிச்சி விட ஆரம்பித்தேன். அதைப் பார்த்து விட்டு என்ன ரௌடி மாதிரி எம்ஜிஆர் கையை மடிச்சி விட ஆரம்பிச்சிருக்காருன்னு சொன்னாங்க.

இதுபோன்ற விமர்சனங்கள் பலவற்றைத் தாண்டித்தான் நான் இதுவரைக்கும் வந்திருக்கேன். என்னுடைய தொப்பியைப் பற்றி இப்போ நீங்க கேட்டீங்க. என் தலையில முடியே இல்லைன்னு வச்சிக்கோங்க. அப்ப நீங்க என்னை எம்ஜிஆர்னு ஏத்துக்க மாட்டீங்களா? வடநாட்டுல என்னைவிட வயது குறைந்த பல நடிகர்கள் இருக்காங்க. அவங்க தலையில முடி இல்லாததால அவங்க எல்லாருமே விக் வச்சித்தான் நடிச்சிக்கிட்டு இருக்காங்க.

adimaipenn mgrஇதுக்கெல்லாம் என்ன சொல்றீங்க? அடிமைப்பெண் படத்தின் படப்பிடிப்புக்காக நான் ஜெய்ப்பூர் போனேன். அப்போது அங்கிருந்த ஒரு அன்பர் இந்தத் தொப்பியைக் கொடுத்து தலையில போட்டுக்கோங்க என்றார். அடுத்ததா தேர்தல் வந்தது. மழை, வெயில்னு எல்லாத்துக்குமே இந்தத் தொப்பி சௌகரியமா இருக்கவே இந்த தொப்பியை அணிகிற வழக்கத்தை நான் மேற்கொண்டேன் என்று பதில் சொல்லி அவரது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.