கோட் படத்தோட வெற்றி ரகசியம் இதுதானாம்... அப்படி என்னப்பா இருக்கு படத்துல?

by sankaran v |   ( Updated:2024-09-07 02:02:02  )
goat
X

goat

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் திடீரென கலெக்ஷனைப் பார்த்தால் அள்ளோ அள்ளுன்னு அள்ளிருக்கு. இதுக்கு என்ன காரணம்னு பார்க்கலாமா...

கோட் படத்தில் இவ்ளோ நடிகர்களுக்கும் ஸ்பேஸ் கொடுத்துட்டு கடைசியா எஸ்.கே.வுக்கும் ஒரு கேமியோ ரோல் கொடுக்கறதுக்கு விஜய் சம்மதிச்சிருக்காரு. அது பெரிய விஷம். கடைசியில மங்காத்தா பிஜிஎம் போட்டதைக் கூட விஜய் சார் அதை ஏத்துக்கிட்டு நடிச்சது அவர் அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்துப் பண்ணியிருக்காரு.

goat

goat

அதை அவர் செய்யணும்னு தேவையில்லை. அதே மாதிரி விஜய் அஜீத்தோட டயலாக்கை பேசி நடிச்சிருப்பாரு. கமல் சாங் இருந்தது. ரஜினி சார் ரெபரன்ஸ், கங்குவா ரெபரன்ஸ்கூட கோட் படத்துல இருந்தது. இதனால் தான் ஒட்டு மொத்த ரசிகர்களையும் படம் ஈர்த்துள்ளது.

விஎப்எக்ஸ் கொஞ்சம் டைம் இருந்தா நல்லா பண்ணிருப்போம்னு சொன்னாங்களாம். அது எதிர்பார்த்த அளவு இல்லை. இது இந்தப் படத்துல மிஸ் ஆகியிருக்கு. எல்லாத்தையும் தாண்டி 360 டிகிரில விஜய் சாரோட நடிப்பு தான் படத்துல உள்ள மைனஸ்களைக் கடந்து போகச் செய்துள்ளது.

வெங்கட்பிரபு சாரோட 3 மணி நேரம் நான் ஸ்டாப்பா நமக்கு பல விஷயங்களை வைத்து என்டர்டெயின்மெண்ட் படத்தைக் கொடுத்துருக்காரு. கடைசியா லியோவுக்குப் பிறகு தமிழ்சினிமா பெரிய வெற்றிகளையே பார்க்கல. விஜய் சார் மீண்டும் சினிமாவுல இருப்பாருன்னு நம்பிக்கை இருக்கு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Also read:கோட் படத்தில் 5 நிமிஷம் ஆட்டம் போட இவ்வளவு கோடி சம்பளமா!. திரிஷா இப்பவும் கில்லிதான்!..

இந்தப் படத்தோட மிகப்பெரிய வெற்றி தமிழ்நாட்டுக்குப் பிறகு 45ல இருந்து 50 கோடி வரை ஓவர்சீஸ்ல கலெக்ஷன் ஆகியிருக்கு. இந்தியாவுலயே அப்படின்னா ஓவர்சீஸ்லயேயும் அதுக்கு ஈக்குவலா கலெக்ஷன் பண்ணுதுன்னா அதுக்குக் காரணம் விஜய் சார் தான். இந்த அளவுக்கு ஓவர்சீஸ் கலெக்ஷனைப் பார்த்துருப்பீங்களா என்றும் அவர் கேட்கிறார்.

கோட் படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 126 கோடிக்கும் மேல் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story