ஜப்பானில் நடைபெறும் கிரஞ்சிரோல் அனிம் அவார்ட்ஸ் 2024 (Crunchyroll Anime Awards 2024) நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்துக் கொள்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அந்த நிகழ்ச்சிக்காக டோக்கியோ நகருக்கு சென்றுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்று அவரே நினைக்காத அளவுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை ஸ்டார் ஆக்கியது அவர்தான்!.. அவர் மட்டும் இல்லன்னா!.. பகீர் கிளப்பும் பிரபலம்!..
முத்து படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஜப்பானிய ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு அதற்கு முன்பும் அதற்கு பின்பும் எந்தவொரு நடிகரும் ஜப்பானில் இத்தனை ரசிகர்களை ஈர்க்கவில்லை.
ராஷ்மிகா மந்தனா தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், விமான நிலையத்திலேயே அவரது புஷ்பா பட போட்டோக்களை ஏந்திக் கொண்டு பல ஜப்பானிய ரசிகைகள் நின்று அவரை வரவேற்றதை பார்த்து அவர் ரொம்பவே சந்தோஷமடைந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு இன்ச் கீழே இறங்கினா மானமே போயிடும்!.. கொஞ்சம் மட்டும் மறச்சி அதிரவிட்ட ராஷி கண்ணா!..
புஷ்பா படம் ராஷ்மிகா மந்தனாவை நேஷ்னல் கிரஷ் என்பதிலிருந்து இன்டர்நேஷ்னல் கிரஷ்ஷாகவே மாற்றிவிட்டது என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் புதிய பட்டத்தையே ராஷ்மிகாவுக்கு கொடுத்துள்ளனர்.
ஜப்பானில் தான் அனிம் ரசிகர்கள் அதிகம். உலகளவில் அனிம் ரசிகர்கள் இருந்தாலும், அதன் தொடக்கம் மற்றும் அதிகமான அனிம் படைப்புகள் அங்கே தான் இருக்கின்றன. உலகளவில் பிரபலங்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த விழாவில் இந்தியா சார்பில் நடிகை ராஷ்மிகா பங்கேற்க உள்ளார்.
இதையும் படிங்க: வசூலில் பட்டைய கிளப்பும் மஞ்சுமெல் பாய்ஸ்!. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடியா?!..
அவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்தால் நிச்சயம் மற்ற நடிகைகள் பொறாமையில் பொங்கத்தான் செய்வார்கள். புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், ராஷ்மிகாவின் மவுசு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில்…
பொங்கல் ரிலீஸாக…
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…