அடங்கப்பா.. நம்புங்கையா.. தவசி படத்துக்கு சீமானா வசனம்? உண்மையை உடைத்த இயக்குனர்..!

Published on: December 30, 2023
---Advertisement---

Thavasi: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சீமான் சொல்லிய தகவல்கள் நேற்றில் இருந்து இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதில் உண்மை இருக்கா இல்லையா என விசாரித்து பார்த்ததில் சில ஆச்சரிய தகவலும் வெளிவந்துள்ளது.

சீமான் தமிழ் சினிமாவில் அறியப்படும் இயக்குனராக இருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார். பின்னர் நடிப்பில் இருந்து வெளியேறி அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அவர் சொன்ன சில விஷயங்கள் பொய் என பேசப்பட்டதால் எப்போதுமே அவரை ட்ரோல் செய்ய கூட்டம் இருக்கும்.

இதையும் படிங்க: உங்க வீட்ல ஒண்ணுன்னா ஓடி வரமாட்டீங்க.. சிம்பு, தனுஷ், விஷால், சூர்யாவை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!

அந்த வகையில் தான் விஜயகாந்தின் இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் துளசி கூட வாசம் மாறும். இந்த தவசி வார்த்தை மாற மாட்டான் எனப் பேசிய டயலாக்கை நானே எழுதி கொடுத்தேன் எனச் சொன்னார். ஆனால் அந்த படத்தின் டைட்டில் கார்டில் வசனம் இயக்குனர் உதயசங்கர் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இதை ஸ்கீரின்ஷாட் போட்டு ரசிகர்கள் இறப்பில் கூட இந்த விளம்பரம் தேவையா என கடுப்பில் திட்டிக்கொண்டு இருந்தனர். உதயகுமாரின் பழைய வீடியோவையும் பரப்பி அவர் எழுதுன வசனத்துக்கு நீங்க கிரெடிட் வாங்கலாமா எனவும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையும் படிங்க: கோபி புருஷனா தோத்து இருக்கலாம்… ஆனா நல்ல அப்பா தான் போலயே… ஃபீல் பண்ண வச்சிட்டாருப்பா!

ஆனால் நான் அதற்கு பதில் டைட்டிலில் நன்றி என அவருக்கு போட்டு இருந்தேன் எனவும் குறிப்பிட்டார். மேலும் ஷூட்டிங்கில் நான் சிலவற்றை சரி செய்து கொண்டேன். மீதி அவர் எழுத்தில் எழுதப்பட்ட வசனங்கள் தான் எனவும் சொல்லி இருக்கிறார். 

இயக்குனர் வசந்தசங்கர் சொன்ன வீடியோவிற்கு: https://www.instagram.com/p/C1cDsw3o18-/

 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.