Connect with us

Cinema News

விஜய்யோட ஒவ்வொரு மூவும் அந்த கட்சிக்குத்தான் ஆப்பு?.. சீமான் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவித்துள்ள நிலையில், அனைத்து பிரபலங்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் செய்தியாளர்கள் அது குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நேற்று பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்களது அரசியல் குறித்தும் சித்தாந்தம் குறித்தும் பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க: லால் சலாம் சோலி முடிஞ்சு!.. சன்டே கலெக்‌ஷனும் செல்ஃப் எடுக்கல!.. வேட்டையன் படத்துக்கும் வேட்டு?..

அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், நடிகர் விஜய் பாஜகவின் பி டீம் இல்லை என்றும் நாங்க வரும்போது காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சி செய்து கொண்டிருந்தது. நாங்க யாருடைய பி டீம் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை திராவிடக் கழகங்களை எதிர்த்தால் உடனடியாக பாஜகவின் கையாள் என சொல்வது எல்லாம் பத்திரிகையாளர்கள் கிளப்பிவிடும் வதந்திதான் அதில் உண்மை இல்லை என்றார்.

வெற்றிக் கழகம் ஒற்று வைக்க வேண்டும் அது பெரிய தவறு இல்லை தம்பி விஜய் வைத்து விடுவார் என சீமான் அந்த கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரேமம் படத்துக்கு ஏன் கேஸ் போடல!.. சேரன் சொன்ன செம மேட்டரு.. அட்லீ ஹேப்பி ஆகிடுவாரு!..

விஜயின் அரசியல் வருகை நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை பாதிக்காதா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த சீமான், ஏன் திமுக அதிமுக கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என எதிர் கேள்வி கேட்டு மடக்கிய சீமான், எங்களுடைய வாக்குகளை தம்பி விஜய் எடுத்துக்கொண்டால் தாராளமாக எடுத்துச் செல்லட்டும்.

மக்களின் வாக்குகள் யாருடைய சட்டை பையில் இருந்தும் எடுக்கப்படுவது இல்லை. அரசியல் சித்தாந்தம், கொள்கை, அவர் என்ன செய்யப் போகிறார் என்று அவர் சொல்வதை கேட்டு மக்கள் வாக்களித்தால் அதை நாங்கள் வரவேற்க தானே செய்வோமே தவிர பொறாமைப்பட மாட்டோம். அதே போல மக்கள் சீமான் சொல்லும் சித்தாத்தங்களை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு வாக்களித்தாலும் தம்பி விஜய் ஏற்றுக் கொள்ளப் போகிறார்.

எங்க இருவருக்கும் சண்டை மூட்டி விடுவதே வேலையா ஏன் பாக்குறீங்க என தொடர்ந்து தவெக vs நாதக என கேள்விகள் நகர கடுப்பாகி விட்டார் சீமான்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top