Connect with us
seeman

Cinema News

இங்கிலீஸுக்கு எதிரினா அதுக்காக இப்படியா? சீமான் சூட்டிங்கின் போது பேசும் அந்த ஒரு தமிழ் வார்த்தை

Actor Seeman: 1991 ஆம் ஆண்டு சினிமா மீது உள்ள ஆசை காரணமாக சென்னைக்கு வந்தவர் தான் சீமான். முதன் முதலில் ராசா மகன், தோழர் பாண்டியன் போன்ற படங்களில் பணியாற்றியவர். அமைதிப்படை என்ற படத்தின் மூலம் தான் முதன் முதலில் நடித்தார். இந்த படத்தை மணிவண்ணன் இயக்க சத்யராஜ் தலைவனாக நடித்து வெளிவந்த படம் .

1987 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த இந்திய அமைதிப்படை என்ற பெயரில் ஒரு படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்த பெயரின் தலைப்பிலேயே ஒரு நகைச்சுவை படத்தை மணிவண்ணன் இயக்கினார். இந்த படத்தில் ஒரு கருப்பு சட்டை அரசியல்வாதியாக சிறு வேடத்தில் சீமான் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: இந்த பள்ளியின் நிறுவனர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவரா? அட சூப்பர் ஹிட் பட நாயகியா இவங்க

இன்று பல அழகிய வரிகளில் அதுவும் தூய தமிழ் கவிதைகளில் பாடல்களை எழுதி மிகவும் பிரபலம் அடைந்தவர் கவிஞர் தாமரை. இவரை அறிமுகப்படுத்தியதே சீமான் தான். பசும்பொன் திரைப்படத்தின் கதை வசனம் முழுவதும் சீமான் தான் எழுதினார். இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு பாஞ்சாலங்குறிச்சி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் இயக்குனர் ஆனார் சீமான்.

அதனைத் தொடர்ந்து இனியவளே, வீரநடை போன்ற படங்களை இயக்கினார் சீமான். சீமான் என்று சொன்னாலே ஆங்கிலத்திற்கு எதிரானவர் என்றுதான் பல மேடைகளில் தன்னை காட்டிக் கொள்வார். மறந்தும் கூட தன் வாயிலிருந்து ஆங்கில வார்த்தை வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் சீமான். இவர் மட்டுமல்ல தமிழர் பெருமைகளை யார் பேசினாலும் அதை கிண்டல் செய்வதற்கு என ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

இதையும் படிங்க:நைட்டு 12 மணிக்கு இயக்குனரின் வீட்டுக்கு போய் வாய்ப்பு கேட்ட அஜித்!. இவரா இப்போ இப்படி மாறிட்டாரு!.

ஆனால் அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் சீமான் இன்று வரை அவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும்போது கூட தன்னுடைய தூய தமிழில் தான் பிரச்சாரம் செய்வார். இதற்கு ஒரு சின்ன உதாரணம் அவர் ஒரு மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டர்கள் பலர் ஐ லவ் யூ அண்ணா என்று சொல்ல அதற்கு பதில் அளிக்கும் விதமாக சீமான் நானும் உன்னை காதலிக்கிறேன் என அந்த அழகிய தமிழில் தான் கூறினார்.

இப்படி ஆங்கிலமே பயன்படுத்தாத சீமான் ஒரு படத்தை இயக்கும் போது எப்படி ஸ்டார்ட் கேமரா ஆக்சன் என்று சொல்வார் என சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் அவர் படத்தை இயக்கும் சமயத்தில் கேமரா என்பதற்கு பதிலாக முடுக்கு என்று தான் சொல்வாராம். அதைக் கூட ஆங்கிலத்தில் சொல்ல மாட்டாராம்.

இதையும் படிங்க: காதல் கோட்டை படத்தில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்… அப்பாவால் பறிபோன வாய்ப்பு…

google news
Continue Reading

More in Cinema News

To Top