Connect with us

Cinema News

அறிமுகம் கொடுத்தவருக்கே அல்வா கொடுத்த விஜய் சேதுபதி.! யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்டு.!

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு, எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்தவர்கள் வெகு சிலரே. ஆனால் அப்படி உழைத்து வந்த அவர்களது வளர்ச்சி அவர்களே நினைத்து பார்க்காதபடி வளர்ந்து இருக்கும். அப்படி ஒருவர் தான் விஜய் சேதுபதி.

சினிமாவில் பல வருட போராட்டத்திற்கு பிறகு, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதில் தனது முழுத்திறமையையும் காட்டி தற்போது மொழிகடந்து தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்க வைக்கும் நிலையை கொண்டுவந்துள்ளார் சேதுபதி.

இவர் முதன்  முதலாக  நாயகனாக அறிமுகமான திரைப்படம் தென் மேற்கு பருவக்காற்று சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த படம் உருவானது. இந்த படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில், இடம் பொருள் ஏவல் (இன்னும் ரிலீஸ் ஆகவில்லை), தர்மதுரை, மாமனிதன் (ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது) இதனை தொடர்ந்து 4வது முறையாக ஒரு படம் விஜய் சேதுபதி – சீனு ராமசாமி இணைய இருந்தனர்.

இதையும் படியுங்களேன் –  என் லெவல் என்னனு எனக்கு தெரியும்.! டான் சிவகார்த்திகேயனை பார்த்து ஒதுங்கிய உதயநிதி.!

இதற்கிடையில் எதோ சில காரணங்களால் கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்காமல் இருந்தார். பிறகு இவர்களை இணைத்து விஜய் சேதுபதி நடிக்க , கலைப்புலி தாணு தயாரிக்க சீனு ராமசாமி இயக்க ஒரு படம் உருவாக இருந்தது. அதற்குள் மிஷ்கினிடம் விஜய் சேதுபதி கதை  கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆதலால், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குவது தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு – விஜய் சேதுபதி இணைய காரணமாகியிருந்த சீனு ராமசாமியை விஜய் சேதுபதி கழட்டி விட்டுட்டார் என சினிமாவாசிகள் கூறி வருகின்றனர். அதற்கு பதில் சேதுபதியிடமே இருக்கும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top