இந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. சிவாஜி படத்தில் பாட மறுத்த பாடகர்!.. இப்பவரைக்கும் எவர் கிரீன் பாட்டு அது!..
சிவாஜியை வைத்து திருவிளையாடல், திருவருட்செல்வர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி போன்ற பல முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இவரை சிவாஜி இயக்குனர் என்றே திரையுலகில் அழைப்பார்கள். பல படங்களை நாகராஜன் இயக்கியிருந்தாலும் திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகனாம்பாள் ஆகிய இரண்டும் சிவாஜியின் கேரியரில் மிகவும் முக்கியமான படங்களாகும்.
எம்.ஜி.ஆர். முதல்வரானபின் அரசு விருந்தினர்களாக வரும் வெளிநாட்டினர்கள் தமிழ் கலாச்சாரம் தொடர்பான திரைப்படத்தை பார்க்க ஆசைப்பட்டால் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு போட்டு காட்டும் படம் தில்லானா மோகனாம்பாள்தான். எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்த திரைப்படம் அதுதான்.
இதையும் படிங்க: சிவாஜியின் ரியல் பாசமலர் ஸ்டோரி தெரியுமா?!.. பாடகியிடம் அன்பு காட்டிய நடிகர் திலகம்!..
அதேபோல், திருவிளையாடல் படமும் தமிழ் சினிமாவின் முக்கிய படமாகவே இருக்கிறது. இந்த படத்தில் சிவாஜி சிவனாகவும், பார்வதியாக சாவித்ரியும் நடித்திருந்தனர். மேலும், ஒரு காட்சியில் வந்தாலும் தருமியாக வந்து நாகேஷ் கலக்கி இருந்தார். இந்த படத்திற்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்.
இந்த படத்தில் அற்புதமான பாடல்களை கொடுத்தார் கே.வி.மகாதேவன். குறிப்பாக ஒரு நாள் போதுமா, பாட்டும் நானே பாவமும் நானே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ‘ஒரு நாள் போதுமா’ பாடல் உருவானதற்கு பின்னால் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க: அந்த விஷயத்துக்காக இரவில் சுவரேறி குதித்த சிவாஜி… பிரபல நடிகர் சொல்லும் சீக்ரெட்…
இந்த பாடலுக்கு கேவி மகாதேவன் மெட்டமைத்துவிட்டார். ஆனால், கவிஞர் கண்ணதாசனுக்கோ பாடல் வரிகள் வரவில்லை. காலை டிபன், மதியம் சாப்பாடு முடிந்து மாலை வந்துவிட்டது. எனவே ஏபி நாகராஜன் கண்ணதாசனிடம் ‘என்ன கவிஞரே. பாட்டு எழுத ஒரு நாள் மோதுமா’ என கேட்க, அதையே பல்லவியாக வைத்து கண்ணதாசன் முழுப்பாடலையும் எழுதி முடித்தார்.
இந்த பாடலை சீர்காழி கோவிந்தராஜனை பாடவைப்பது என முடிவெடுத்தனர். ஆனால், பாடல் வரும் காட்சி பற்றி கேட்ட சீர்காழி ‘இந்த பாடலை பாடும் பாடகர் ஒரு கட்டத்தில் தோற்பது போல் காட்சி வருகிறது. நான் பாடமாட்டேன்’ என சொல்லிவிட்டார். அதன்பின் பாலமுரளி கிருஷ்ணாவை பாடவைத்தனர். திரையில் நடிகர் பாலய்யா இந்த பாடலை பாடுவது போல் காட்சி வரும். அவர் பாடிய அந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போதும் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பாடும் திறனை சோதனை செய்ய இந்த பாடலைத்தான் பாட சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என் வீட்டு பொம்பளங்களையும் நீ கெடுத்து வச்சிருக்க!.. பாக்கியராஜிடம் கோபப்பட்ட சிவாஜி!..