அந்த ஒரு சீனை எடுக்கமுடியாமல் தவித்த இயக்குனர்!.. ஆத்திரத்தில் சீதாவை பளார் அறைவிட்ட பிரபல நடிகர்?..
தமிழ் சினிமாவில் 80களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. ரஜினி, கமல், பார்த்திபன், பாண்டியராஜன் என முன்னனி நடிகர்களுடன் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றவர். தமிழ் , தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து நடிகை அந்தஸ்தை பெற்றவர்.
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் நடிகரும் , இயக்குனருமான பார்த்திபனை காதலித்து கரம் பிடித்தார்.
ஆனால் ஏதோ ஒரு வித காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டனர். இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் நடிகர் பாண்டியராஜன். புகைப்படங்களை பார்த்து அதன் மூலம் பிடித்து நேராக சீதாவின் வீட்டிற்கே சென்று அவரின் அப்பாவிடம் சீதாவை நடிக்கவைக்க அனுமதி வாங்கினார் பாண்டியராஜன்.
ஆனால் சீதாவிற்கு நடிப்பதில் ஆர்வமே இல்லையாம். ஒருவழியாக அவரை பாண்டியராஜன் சம்மதிக்க வைத்தார். அப்படி உருவான திரைப்படம்தான் ஆண்பாவம். படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு கடிகாரம் ஒன்று சூடான நீரில் விழ அதை எடுப்பதற்கு சீதா தான் அணிந்திருந்த தாவணியின் மேலாடையை வடிகட்டி மாதிரி பயன்படுத்தி அந்த கடிகாரத்தை எடுக்க வேண்டும்.
ஆனால் சீதா நான் தாவணியை கழட்ட முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பாண்டியராஜன் ‘இல்லமா கதைப்படி அப்படி செய்தால் தான் சரியாக இருக்கும், நான் அந்த மாதிரிலாம் படம் எடுக்கிறவன் இல்ல’ என்று கூறியும் சீதா முடியாது என்று கூறியிருக்கிறார். உடனே சரி மேலாடையை போட வேண்டாம்.
சைடு முந்தானையை வடிகட்டியாக பயன்படுத்தி கடிகாரத்தை எடு என்று சொன்னதும் ஓகே என்று சொல்லியிருக்கிறார். சொன்ன மாதிரி அந்த காட்சியில் நடித்து சீதா உடனே கேமராவை பார்த்திருக்கிறார். இதனால் கோபப் பட்ட பாண்டியராஜன் ஏன் கேமிராவை பார்த்த? என கேட்க ‘இல்ல சரியா என்று கேட்கதான் பார்த்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அச்சச்சோ.. அனுஷ்காவுக்கு இந்த வியாதியா?.. பரிதாபத்தில் சினிமா உலகம்!..
அதை பார்க்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அந்த சீனை எடுத்திருக்கிறார். மீண்டும் சீதா கேமிராவை பார்க்க ஆத்திரத்தில் பாண்டியராஜன் கிட்டப் போய் கை ஓங்க சீதா படக்கென்று மேல எழ கை சீதாவின் கன்னத்தில் பட்டு விட்டதாம். உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். அதன் பிறகு சமாதானம் செய்து மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார் பாண்டியராஜன்.