பார்த்திபன் சொன்ன மொத்தமும் பொய்… உண்மையை உடைக்கும் சீதா… அட இதுதான் நடந்துச்சா!...

Actress seetha: தனது குடும்ப பாங்கான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை சீதா. இவர் தமிழில் ஆண் பாவம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாய் அறிமுகமானார். இவர் மேலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

தமிழை தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த புதிய பாதை திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் பார்த்திபன். இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் வாசிங்க:ஓவரா பண்ணக்கூடாது!.. அமீர் மட்டும் நினைச்சிருந்தா!. ஞானவேல் ராஜாவை பொளந்துகட்டும் தயாரிப்பாளர்..

ஆனால் யார் கண் பட்டதோ இவர்களின் திருமணம் நீடித்து நிலைக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர். அதன்பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட சீதா அவருடனும் வாழவில்லை. கடைசியில் அவரையும் விவாகரத்து செய்து கொண்டார்.

பின் இவர் தனக்கு எது விருப்பமோ அந்த துறையை தீர்மானித்து அதில் ஜொலிக்க ஆரம்பித்தார். இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் பல மேடைகளில் சீதாவின் காதலை எற்று கொள்ளக்கூடிய சூழ்நிலையில் தான் இருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பேச்சு மீது சீதா கடும் கண்டனத்தை வைத்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை!.. முரட்டு கோபக்காரரான அஜித் சாதுவாக மாறிய அந்த சம்பவம்!.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சீதா பார்த்திபன் சொல்வது அப்பட்டமான பொய் என கூறியுள்ளார். பார்த்திபன் ஆரம்பகாலத்தில் நடிகை சீதாவுடன் போனில் பேசும் போது அந்த மூன்று வார்த்தையை கூறுமாறு அடிக்கடி கூறுவாராம். ஆனால் சீதாவோ ஐ லவ் யூ எனும் அந்த மூன்று வார்த்தையை சொல்ல கிட்டதட்ட 10 நாட்கள் எடுத்து கொண்டதாகவும் அதன்பின் தனது காதலை சொன்னராம்.

ஆனால் இருவருக்குமிடையே இருந்த காதல் என்பது உண்மைதான் எனவும் ஆனால் பார்த்திபன்தான் தன்னிடம் அந்த மூன்று வார்த்தையை கூறுமாறு கேட்டதாகவும் கூறியுள்ளார். எனவே பார்த்திபன் மேடைகளில் 'சீதாவின் காதலை ஏற்று கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன்' என கூறியது கண்டிப்பாக பொய் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு!. அலைபாயுதே ஸ்டைலில் பிட்டு போட்டு ஷாலினியை கவுத்த அஜித்…

 

Related Articles

Next Story