தன் சொன்னதையும் மீறி மனைவி செய்த காரியம்! வருத்தத்தில் செல்வராகவன்.. இப்படி ஏமாத்திட்டாங்களே?
Director Selvaraghavan: தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக நடிகராக தன்னுடைய சிறந்த படைப்புகளையும் நடிப்பையும் கொடுத்து வருபவர் நடிகர் செல்வராகவன். காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார் செல்வராகவன். ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் மூலம் பல தரமான சம்பவங்களை செய்து இருக்கிறார்.
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7 ஜி ரெயின்போ காலனி போன்ற இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களின் லிஸ்டில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அதைப்போல இரண்டாம் உலகம், நானே வருவேன் போன்ற படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க பட்டாலும் பெரும் தோல்வியை தழுவின.
இதையும் படிங்க: கண்ணதாசன், எம்.எஸ்.வி. இருவரின் ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிய பாடல்… அட செம மாஸா இருக்கே..?
இப்படி தன் படைப்புகளின் மூலம் தான் யார் என்பதை காட்டி வந்த செல்வராகவன் பீஸ்ட் படத்தின் மூலம் முதன்முதலில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சாணிக்காயிதம், பகாசூரன், நானே வருவேன் போன்ற படங்களிலும் நடித்து இவருக்குள்ளும் ஒரு சிறந்த நடிகன் இருக்கிறான் என்ற ஒரு ஆச்சரியத்தை வரவழைத்தார்.
இந்த நிலையில் செல்வராகவன் தன் மனைவி குறித்து பதிவிட்ட ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. சோனியா அகர்வாலுடன் ஏற்பட்ட பிரிதலுக்குப் பிறகு தனக்கு உதவியாளராக இருந்த பெண்ணை கரம்பிடித்தார் செல்வராகவன். ஆரம்பத்தில் அவர் மிகவும் குண்டாகத்தான் இருந்தாராம். ஆனால் தன் மனைவியிடம் எப்போதும் நீ இப்படியே இரு. மாற வேண்டாம் என்று 100 முறை சொல்லி இருப்பாராம். ஏனெனில் செல்வராகவனுக்கு குண்டாக இருந்தால்தான் பிடிக்குமாம். ஆனால் அதையும் மீறி அவர் மனைவி அவருடைய வெயிட்டை குறைத்து விட்டாராம். அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது என அந்த பதிவில் கூறி இருக்கிறார் செல்வராகவன்.
இதையும் படிங்க: என்கூட நடிக்க அவங்கதான் தயாரா வரனும்! அஜித்தை பற்றி ராதிகா சொன்ன விஷயம்