கண்ணதாசன், எம்.எஸ்.வி. இருவரின் ஆசைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றிய பாடல்... அட செம மாஸா இருக்கே..?

1950களின் தொடக்கத்தில் இந்தி கவிஞர் பிரதீப் ஒரு படத்துக்குப் பாட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார். அப்போது கவியரசர் கண்ணதாசன் அவரை எதேச்சையாக சந்திக்கிறார். அந்;தப் பாடலைப் பற்றிக் கேட்கிறார். அப்போ அவரு ஒரு குறிப்பிட்ட வார்த்தையைக் கண்ணதாசனிடம் சொல்கிறார். அது அவருக்கு மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது, அப்புறம் இதே மாதிரி ஒரு பாடலை எழுதணும்னு நினைக்கிறார்.

இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனது. எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்த நேரத்தில் ஒரு நாள் சாந்தோம் பீச்சில் நடந்து சென்றாராம்.

இதையும் படிங்க... தமிழ் சினிமாவிலேயே நான்தான் ஃபர்ஸ்ட்! சுந்தர் சி சொன்ன அந்த மேட்டர் என்ன தெரியுமா?

அப்போ அங்கிருந்த மீனவர்கள் அலுப்புத் தெரியாமல் இருந்ததற்காக ஒரு மெலடி சாங்கைப் பாடிக்கொண்டு இருந்தார்களாம். அதைப் பார்த்த எம்எஸ்வி.க்கு நாமும் இதே போல ஒரு பாடலை உருவாக்கணும்னு மனசுக்குள் நினைத்தாராம். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.

1961ல் பீம்சிங் படம் இயக்கும்போது ஒரு பாடலுக்கான சிட்டியுவேஷனை சொல்கிறார். அப்போது கண்ணதாசன் நினைத்ததும், எம்ஸ்.வி. நினைத்ததும் ஒன்றாக அரங்கேறுகிறது. அது என்ன படம்? என்ன பாடல்னு பார்க்கலாம்.

1961ம் வருடம் சந்திரபாபுவுடன் கதை விவாதம் நடந்தது. இயக்குனர் பீம்சிங்கிடம் ஒரு படத்தின் கதைச்சுருக்கத்தை சந்திரபாபு சொன்னாராம். இந்துவா பிறந்து ஒருவன் பெற்றோரைப் பிரிந்து இஸ்லாமியரா வளரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்கிறான். இப்படி ஒரு வித்தியாசமான கதை. ஆரம்பத்தில் சந்திரபாபு தான் நடிப்பதாக இருந்ததாம். அதன்பிறகு வந்த பிரச்சனையால சிவாஜி நடித்தாராம்.

Pava mannippu

Pava mannippu

சிவாஜிக்கு 3 மதங்கள் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் அவரது மனதில் இப்படி எண்ணம் தோன்றியது. எப்படி இந்த மனிதன் பிரிந்து போகிறான். ஏன் சாதி, மதம் என்று ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்துள்ளான்? ஏன் இந்த உலகம் இப்படி கெட்டுப்போனது என்று சிவாஜி பாடுவது போன்ற பாடல்.

பீம்சிங் பாடலுக்குரிய விளக்கத்தை சொன்னதும் கண்ணதாசனுக்கு இந்தி கவிஞர் சொன்ன ஞாபகம் வருகிறது. ஆகா எவ்வளவு நாள் நினைத்தோம். அதற்கான சூழல் இப்போது வந்துவிட்டது என்று கண்ணதாசன் அந்தப் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டாராம். அப்போது எம்எஸ்வி.க்கு அந்தப் பாடலைப் பார்த்ததும் அவர் கொஞ்ச நேரம் அமைதியாகி விடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் உருவாக்க வேண்டும் என்று நினைத்த பாடல் அதுதான் என்று முடிவு பண்ணினார். அந்தப் பாடலில் விசில் சத்தம் செம மாஸாகக் கொடுத்திருப்பார் எம்.எஸ்.வி. பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் பெயர் பாவமன்னிப்பு.

அது எந்தப் பாடல் என்றால் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. வான் மதியும், மீனும், கடல் காற்றும் கொடியும், சோலையும் நதிகள் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான். மதத்தில் ஏறிவிட்டான் என்ற பாடல் தான் அது.

 

Related Articles

Next Story