வறுமையின் கொடுமையைப் பார்த்தவன் நான்… தனுஷூக்கு அதுதான் கிடையாது… செல்வராகவன் 'பளிச்' தகவல்

by sankaran v |   ( Updated:2025-04-05 05:52:57  )
dhanush selvaraghavan
X

dhanush selvaraghavan

இயக்குனர் செல்வராகவன் தம்பி தனுஷை ஆரம்ப காலங்களில் தனது படங்களில் நடிக்க வைத்து பெரிய ஹீரோவாக்கினார். அது மட்டும் அல்லாமல் அவருக்கு நடிப்பு என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொடுத்து அதில் ஆர்வத்தை உண்டாக்கியவரும் இவர்தான். துள்ளுவதோ இளமையில் அறிமுகப்படுத்தி தனுஷைத் துள்ளச் செய்தார்.

தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களைக் கொடுத்து தனுஷை வேற லெவல் ஹீரோவாக்கினார். அதே நேரம் தனுஷ் வளர்ந்து தனது அண்ணனையே இயக்கி விட்டார். அந்தப் படம் தான் ராயன். இது ஒரு ஆக்ஷன் படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்குனராக இருந்து அவ்வப்போது படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இயக்குனராகவும் மட்டுமல்லாமல் நடிப்பிலும் பல புதிய பரிமாணங்களைக் கையாண்டு மிரட்டி இருப்பார் செல்வராகவன். இவரது நடிப்புக்கு பகாசூரன் படம் ஒன்றே போதும். மனுஷன் மிரட்டி இருப்பார். ராயன் படத்திலும் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இவர் இயக்கி வெற்றிகரமாக ஓடிய படம் 7ஜி ரெயின்போ காலனி. அந்தப் படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ரவிகிருஷ்ணா, அனஸ்வரராஜன், ஜெயராம், சுதா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். முதல் பாகத்தில் உள்ள அதே ஹீரோ அதே இசை அமைப்பாளர் தான் 2ம் பாகத்திலும் என்பது குறிப்பிடத்தக்கது.

7g rainbow colony 2தற்போது தனது குடும்பத்தில் ஆரம்பகாலத்தில் இருந்த கஷ்டங்களை இப்போது பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

சின்ன வயசுல எங்களுக்கு வறுமை அதிகம். ஊர்ல இருந்து சென்னைக்கு எங்க அப்பா பிழைக்க தான் கூட்டிட்டு வந்தாரு. சாப்பிடுவதற்கு சோறு கூட இருக்காது. அப்போ நானும் என் சிஸ்டரும் மட்டும் தான் இருந்தோம். எங்க அம்மா பக்கத்து வீட்ல, அப்பா வேலைக்கு போகணும்.

அதனால் டிரஸ்சுக்குப் போட கஞ்சி குடுங்க என்று கேட்டு வாங்கிட்டு வந்து அதை எங்களுக்குக் கொடுப்பாங்க. அப்படி வறுமையோட முழு உருவத்தையும் பார்த்துட்டு வந்தவங்க தான் நாங்க. இதில் வறுமையை பார்க்காம வந்தவர் தனுஷ். அவர் பிறக்கும்போது ஓரளவுக்கு செட்டில் ஆகிட்டோம் என்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

Next Story