SelvaRaghavan: தமிழ் சினிமாவில் இயக்குனராக அண்ணன், நடிகராக தம்பி என்ற வரிக்கு முதலில் அடையாளம் கொடுத்ததே செல்வராகவன், தனுஷ் கூட்டணி தான். அப்படி இருக்க திடீரென தம்பி குறித்து செல்வராகவன் போட்ட ஒரு போஸ்ட் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.
தனுஷை வைத்து முதன் முதலில் துள்ளுவதோ இளமை என்ற படத்தினை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அப்படத்திற்கு எதிர்ப்பு ஒருபக்கம் வந்தாலும் படம் நல்ல வசூலை பெற்றது. அதோடு, தனுஷின் சினிமா கேரியருக்கு மிகவும் உதவிய படம் அது. அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் காதல் கொண்டேன்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த ‘இணைந்த கைகள்’!… பல வகைகளிலும் வந்த தடை!.. நடந்தது இதுதான்!..
அப்படத்தில் தனுஷின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. படமும் சூப்பர் ஹிட் ஆனது. கிட்டத்தட்ட தனுஷின் வளர்ச்சிக்கு இப்படம் மிகப்பெரிய அளவில் உதவியது என்றே சொல்ல வேண்டும். அதை தொடர்ந்து அண்ணனும் தம்பியும் இன்னும் சில படங்களில் இணைந்து பணிபுரிந்தனர். கடைசியாக தனுஷின் நடிப்பில் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார்.
தற்போது இயக்கத்தை விட நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கூட செல்வராகவனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. அதே நேரத்தில் தனுஷ் தன்னுடைய நடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இயக்கத்தில் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய்கிட்ட முதல்ல சொன்னதே நான்தான்! பகிரங்கமாக கூட்டணி பற்றி கூறிய கமல்
இதைத் தொடர்ந்து செல்வராகவன் தன்னுடைய ட்விட்டரில் இருந்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ராயன் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தான் செய்ததாக சில செய்திகள் வெளியாகிறது. அது உண்மை இல்லை. ராயன் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் நான் எதுவுமே செய்யவில்லை. அது முழுக்க முழுக்க தனுஷின் கனவு படைப்பாக அவரால் மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் நான் ஒரு நடிகனாக மட்டுமே பணிபுரிந்து இருக்கிறேன்.
மற்றவர்களைப் போல நானும் ராயன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். எனது அன்புத் தம்பி தனுஷின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் நினைத்து பெருமை கொள்கிறேன் என தெரிவிக்கிறார். தனுஷ், சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் படத்தினை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…