More
Categories: Cinema News latest news

அது ரஜினியே இருந்தாலும் செல்வராகவனிடம் அது மட்டும் நடக்காதாம்! இப்படி ஒரு ரூலா?

Selvaraghavan: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை எடுத்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த செல்வராகவன் முதன்முதலாக தன் தம்பியும் நடிகர்ருமான தனுஷை அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து காதல் கொண்டேன், அதன் பிறகு 7 ஜி ரெயின்போ காலனி போன்ற ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் அவருக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார் செல்வராகவன். அவர் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துபவையாகவும் சைலன்டான ஸ்கிரீன் ப்ளேயுடனும் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இதையும் படிங்க: நயன்தாராவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா மந்தனா!.. சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….

அவர் எடுத்த படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுத்த படம் என்றால் அது ஆயிரத்தில் ஒருவன். அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என இப்போதைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது செல்வராகவன் நடிகராகவும் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை காட்டி வருகிறார். சாணிக்காயிதம் திரைப்படம் தான் அவருடைய நடிப்பிற்கு தீனி போட்ட படமாக அமைந்தது .

சாணி காகிதம் தவிர்த்து பீஸ்ட் ,பகாசூரன் போன்ற படங்களிலும் செல்வராகவன் நடித்திருக்கிறார் . அதுபோக ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது மக்களுக்கு தேவையான தத்துவங்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகிறார் .இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் NGK.இந்த படத்தில் சூர்யா சாய் பல்லவி போன்றோர் லீடு ரோலில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: பின்வாங்கும் புஷ்பா 2!. ஆகஸ்டு 15-க்கு களமிறங்கும் இரண்டு முக்கிய படங்கள்!…

ஒரு அரசியல் கதைகளத்தில் அமைந்த இந்த படம் ஓரளவு மக்களை திருப்தி படுத்தியது. இதில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை உமா. அவர் செல்வராகவன் குறித்து ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். மற்ற இயக்குனர்கள் எல்லாம் தனக்கென ஒரு மானிட்டர் வைத்து அதன் மூலம் சீன் சரியாக வந்திருக்கிறதா இல்லையா என்பதை பார்ப்பார்கள்.

அருகில் அந்த படத்தில் நடித்த ஹீரோ ஹீரோயின்களையும் பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் செல்வராகவன் அவருடைய மானிட்டர் பக்கம் யாரையும் விட மாட்டாராம். அது எந்த பெரிய நடிகராக இருந்தாலும் இதுவரை யாரையும் அனுமதிப்பதே இல்லையாம். அதேபோல் தான் இந்த படத்திலும் சூர்யா உட்பட யாரையும் அந்த மானிட்டர் பக்கம் அனுமதித்ததே கிடையாதாம்.

இதையும் படிங்க: கமல் அந்த விஷயத்துல ரொம்ப நேர்மையானவரு… இயக்குனர் சொல்லும் ‘அபூர்வ’ தகவல்

ஆனால் சாய் பல்லவி மானிட்டரில் நம் முகம் எப்படி இருக்கிறது என்பதை எட்டிப் பார்த்து இருக்கிறார் .உடனே செல்வராகவன் நோ நோ இது என்னுடையது .யாரும் வரக்கூடாது என அவரை போக சொல்லி விட்டதாக உமா கூறினார்.

Published by
Rohini

Recent Posts