Cinema News
வடிவேலு அட்வான்ஸ் என் சம்பளமா?!.. விஜயகாந்த் படத்தில் தகராறு செய்த செந்தில்…
Actor senthil: சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி சின்ன சின்ன வேலைகளை செய்து பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு தெரு நாடகங்களில் நடிக்க துவங்கியவர் நடிகர் செந்தில். பாக்கியராஜின் உதவியால் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து ஆப் ஆனவர். அதுவும் ‘தூரல் நின்னு போச்சி’ படத்தில் நம்பியாருடன் நடிக்கும் வாய்ப்பை செந்திலுக்கு பாக்கியராஜ் கொடுத்தபோது கண்கலங்கி அழுதுவிட்டாராம். இதை பாக்கியராஜே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதன்பின் கவுண்டமணியுடன் கூட்டணி போட்டு அவர் நடித்த படங்களில் அவரிடம் திட்டும், உதையும் வாங்கும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இதுவே செந்திலை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன்பின் பல திரைப்படங்களில் கவுண்டமணியுடன் நடித்தார். ஒருகட்டத்தில் கவுண்டமணி – செந்தில் இருந்தாலே படம் ஹிட் என்கிற நிலையும் கூட உருவானது.
இதையும் படிங்க: விஜயகாந்த் படத்துக்கு காசு வாங்கிட்டு நடிக்காம போன வடிவேலு!.. களத்தில் இறங்கி செஞ்ச கவுண்டமணி..
90களில் ரஜினி, கார்த்திக், பிரபு, சத்தியராஜ், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் வெற்றிக்கே கவுண்டமணி – செந்தில் கவுண்டமணி காமெடி தேவைப்பட்டது. பாக்கியராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், சவுந்தர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து 2003ம் வருடம் வெளியான திரைப்படம் சொக்கத்தங்கம்.
இந்த படத்தில் காமெடி காட்சிகளில் நடிக்க முதலில் வடிவேலுதான் பேசப்பட்டார். இதற்காக அவருக்கு ரூ.3 லட்சம் அடவான்ஸும் கொடுக்கப்பட்டது. ஆனால், வடிவேலு கடைசிவரை அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. எனவே, கவுண்டமணி – செந்திலை பேசி இப்படத்தில் நடிக்க வைத்தனர்.
படப்பிடிப்பு முடிந்தபின் வடிவேலுவிடம் கொடுத்த 3 லட்சத்தை வாங்கி செந்திலுக்கு சம்பளமாக கொடுத்தனர். ‘வடிவேலுவுக்கு அட்வான்ஸா கொடுத்த படம் எனக்கு மொத்த சம்பளமா?.. இது பாக்கியராஜோட சொந்த படம்னா நான் சம்பளம் வாங்கமா கூட நடிப்பேன். ஆனால், அப்படி இல்லையே.. இன்னும் சம்பளம் கொடுத்தாத்தான் நான் டப்பிங் பேசிக்கொடுப்பேன்’ என கறாராக செந்தில் சொல்லிவிட்டாராம். அதன்பின், அவரின் வீட்டுக்கு நடையா நடந்து ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்து டப்பிங் பேச வைத்தார்களாம்.
இதையும் படிங்க: காமெடி நடிகருக்காக பாரதிராஜாவிடமே சண்டை போட்ட பிரபல நடிகர்..! கவுண்டமணியை மிஸ் பண்ணவே மாட்டாராம்..!