விஜயை இமிடேட் பண்றதால கடுப்பாயிட்டான்! விஜய்க்கும் தனக்கும் நடந்த சண்டையை பற்றி கூறிய சஞ்சீவ்
Actor Vijay: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஒரு டாப் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் விஜய். ரஜினி , கமலுக்கு அடுத்த படியாக விஜயும் அஜித்தும்தான் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறார்கள். இதில் விஜய் ஒரு படி மேலாக கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் அதிக வசூலை அள்ளும் படமாக விஜயின் படங்கள் தான் சமீபகாலமாக இருந்து வருகின்றன. படத்தின் கதை எப்படி இருந்தாலும் ஒரு நல்ல ஓப்பனிங் என்றால் அது விஜய்க்குத்தான். ரசிகர்கள் ஒரு திருவிழாவை போல் விஜயின் படங்களை கொண்டாடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: எல்லாம் பொய்! பிக்பாஸில் கமல் நடந்து கொண்ட விதத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்
ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயின் அரசியல் அமைந்து விட்டது. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மற்றும் ஒப்புக் கொண்ட திரைப்படங்களை மட்டும் முடித்துக் கொண்டு சினிமாவிற்கு ஃபுல் ஸ்டாப் வைப்பதாக விஜய் அறிவித்திருக்கிறார். அதன் பிறகு முழு நேர அரசியலை கையில் எடுக்கிறார்.
இது ஒட்டுமொத்த திரை ரசிகர்களுக்கும் திரைப் பிரபலங்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அரசியலிலும் ஒரு நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே விஜய் அரசியலுக்கு செல்கிறார் என ஆறுதல் அடைந்துவருகின்றனர் ரசிகர்கள்.
இதையும் படிங்க: அனிருத்தை ஹீரோவாக்கிய கதை தான் டாடா… ஆனா நடந்தது… இயக்குனர் சொன்ன சீக்ரெட்..
இந்த நிலையில் விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் சமீபத்தில் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தார். அதாவது அவர் நடிப்பு கிட்டத்தட்ட விஜயை மாதிரியேதான் இருக்கும். சிரிக்கும் போது, அழுகும் போது, டையலாக் பேசும் போது என எல்லா கோணங்களிலும் விஜயைத்தான் பிரதிபலிப்பார் சஞ்சீவ்.
இதை விஜயே ஒரு முறை கேட்டு சண்டைப் போட்டாராம். ‘டேய் என்னை மாதிரி நடிக்கிற. என்னை மாதிரியே பேசுற.. நீயாச்சும் அடிக்கடி ஸ்கிரீன்ல வர. ஆனா நான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இல்ல வருடத்திற்கு ஒரு தடவைதான் ஸ்க்ரீல தெரியுறேன். அதனால கொஞ்சம் குறைச்சுக்கோ. நான் உன்னை மாதிரி நடிக்கிறேனா? நீ என்ன மாதிரி நடிக்கிறீயானு ரசிகர்களுக்கு குழப்பம் வந்துவிடும்’ என கூறினாராம்.
இதையும் படிங்க:கல்யாணம் ஆகியும் அடங்கலயே!. நம்ம அசோக் செல்வன் மனைவி போட்டோஸ் பாருங்க!..
இதைப் பற்றி பேசிய சஞ்சீவ் ‘எனக்கும் விஜய்க்கும் 25 வருட கால நட்பு. அதனால் விஜயின் பாதிப்பு கண்டிப்பாக என்னிடம் இருக்கத்தான் செய்யும். அதற்காக நான் விஜய் மாதிரி பேசனும், சிரிக்கனும் , அழுகனும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு நடிக்க மாட்டேன். அது தானாக வருவது’ என கூறினார்.