குண்டா இருக்கேன்கிறதுக்காக அதுக்கு கூப்பிடுவியா...? தெறிச்சு விழும் சின்னைத்திரை நாயகி பென்ஸி...

சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் சக்கப்போடு போட்ட சிரியல் நாதஸ்வரம். மெட்டி ஒலிக்கு அடுத்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் இதுனே சொல்லலாம்.குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல். இதில் நடித்த கதாபாத்திரங்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.
இந்த சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக காமு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை பென்ஸி. இவர் இந்த சீரயல் மட்டுமில்லாமல் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலிலும் நடித்துள்ளார்.
அதையடுத்து அவரை சின்னத்திரைப் பக்கமே பார்க்க முடிவதில்லை. அண்மையில் அவரை நேர்காணல் எடுத்தபோது சில தகவல்களை பகிர்ந்தார். வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு வந்ததும் நடிக்க மறுத்து விட்டாராம்.
சீரியலிலிம் பல கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் நான் தான் ஒதுக்கி விட்டேன். ஏன் என கேட்டபோது குண்டா இருக்கேன் அப்படிங்கிறதுக்காக அத்தை, சித்தி கதாபாத்திரத்திற்கு கூப்பிடிவாங்களா? இன்னும் அதுக்கு நேரம் இருக்குனு சொல்லி தன்னுடைய வயசு பத்தின தகவலை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.