Serial Actress Deepa: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தீபா. குணச்சித்திர வேடத்தில் பல தொடர்களில் நடித்து வரும் தீபா இப்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி போன்ற தொடர்களில் தயாரிப்பு மேலாளராக இருப்பவர் சாய்கணேஷ்.
இவரை செல்லமாக பாபு என்றுதான் அழைப்பார்களாம். இவரைத்தான் நடிகை தீபா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே தீபாவுக்கு திருமணமாகி தோளுக்கு மேல் வளர்ந்த பையன் இருக்கிறார்.
இதையும் படிங்க: குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!
இவர்களின் திருமணத்தால் சாய்கணேஷின் வீட்டில் இருந்து தீபாவுக்கு மிரட்டல்கள் வந்ததாம். ஆனால் அதையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு ஒரு கோயிலில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த திருமணத்திற்கு முன்பே இருவரும் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் கூட செய்திருக்கிறார்களாம். மேலும் தீபா அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி போன்ற பல தொடர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஹெச்.வினோத் படத்துக்காக மீண்டும் துப்பாக்கி எடுக்கும் கமல்ஹாசன்!.. மெர்சலாக்கும் டிரெய்னிங் வீடியோ…
வில்லியாகவும் காமெடி நடிகையாகவும் நடித்துள்ள தீபா மக்களுக்கு மிகவும் பரீட்சையமானவர். முதல் திருமணத்தை முறைப்படி விவகாரத்து பெற்று அதன் பின் தயாரிப்பு மேலாளரான சாய் கணேசை இப்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார் தீபா.
இவர்களின் திருமணம் இருவரின் வீட்டாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சின்னத்திரை வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தளவுக்கு தீபாவும் சரி சாய்கணேசும் சரி பழகும் விதத்தில் மிகவும் எளிமையாகவும் அன்புடனும் பழகக் கூடியவர்களாம்.
இதையும் படிங்க: வேட்டையனா வரச்சொன்னா ரஜினி பார்ட்- 2வா வந்து நிக்குற! வாசுவை திக்குமுக்காட வைத்த லாரன்ஸ்!..