கதவ மூடிட்டு அப்படி பண்ணுவாங்க! சீரியல் நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

Published on: September 14, 2024
nimeshika
---Advertisement---

Serial Actress Nimeshika: பாலியல் ரீதியான பிரச்சனை பெரும்பாலும் சினிமா துறையில் நடிகைகளுக்கு நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீப காலமாக மலையாள சினிமா இந்த ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஹேமா கமிட்டி என்ற ஒரு அமைப்பின் மூலம் மலையாள சினிமாவில் ஏகப்பட்ட பல பெரிய பெரிய முன்னணி நடிகர்கள் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் பேர் மீது எஃப்ஐஆரும் போடப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு முழு அறிக்கை ஹேமா கமிட்டி வெளிவிடவில்லை.

அதற்குள் இத்தனை பேரா என அனைவருமே ஆச்சரியப்பட்டு வருகின்றனர். முழு அறிக்கையும் வெளிவந்தால் ஒட்டுமொத்த மலையாள சினிமாவுமே மிகவும் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த கமிட்டியால் தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது .

இங்குள்ள பல முன்னணி நடிகைகள் தமிழ் சினிமாவிலும் இதேபோல் நிறைய பேர் இருக்கிறார்கள் என சூசகமாக பேசி வருகிறார்கள்.  ஹேமா கமிட்டி மாதிரி இங்கேயும் ஒரு கமிட்டி வரவேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் காரணமாக நடிகர் சங்கம் ஒன்று சேர்ந்து நடிகை ரோகினியை தலைமையாக வைத்து விசாக கமிட்டி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இப்படி ஒரு சூழல் போய்க்கொண்டிருக்க இன்று ஒரு சீரியல் நடிகை பகிர்ந்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கண்ணான கண்ணே என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருபவர் நிமிஷிகா. சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் தான் கண்ணான கண்ணே .அதில் நடிகர் பப்லுவுக்கு மகளாக நடித்திருப்பார் நிமிஷிகா. அவர் சீரியலிலும் இந்த மாதிரி பிரச்சினைகள் நடப்பதாக பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதுவும் ஒரு உயர்ந்த அத்தாரிட்டியில் இருப்பவர்கள் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள். சாதாரண உதவி இயக்குனர்களாக இருப்பவர்கள், லைட் மேன்கள் என இவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நான் கண் முன்னாலையே பார்த்திருக்கிறேன்.

ஒரு உதவி இயக்குனர் கதவை மூடிப்பார். ஆனால் உள்ளே ஒரு பெண் இருப்பார். அந்தப் பெண் வெளியே வரும்போது சில நேரங்களில் சிரித்துக் கொண்டு வருவார். ஏனென்றால் அந்த பெண்ணை எப்படியோ கன்வின்ஸ் செய்து அந்த உதவி இயக்குனர் அந்த காரியத்தை செய்து விடுவார்.

இப்படி எல்லாம் நடந்திருக்கிறது. நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அதனால் இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பள்ளியில் இருந்து கொண்டு வர வேண்டும் .குறிப்பாக ஆண்களுக்கு இதை போன்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்த பேட்டியில் நிமிஷிகா கூறியிருக்கிறார்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.