More
Categories: latest news television

இதுக்குதான் டைவர்ஸ் ஆச்சா?!.. ரகசியத்தை போட்டுடைத்த சீரியல் நடிகை – அட கொடுமையே!..

Serial Actress Krithika: மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. அதற்கு முன் பல சீரியல்களில் நடித்தாலும் மெட்டி ஒலி சீரியல்தான் கிருத்திகாவை யாரென்று இந்த டெலிவிஷனுக்கு அறிமுகப்படுத்தியது.

பள்ளி படிப்பு படிக்கும் போதே சீரியல்களில் நுழைந்த கிருத்திகா அதன் பிறகு சீரியலை ஸ்கிப் செய்து கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் சீரியலில் நுழைந்தார். இவர் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கதாபாத்திரங்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: முதல் மரியாதை பட வாய்ப்பை மிஸ் பண்ணிய ரம்யா கிருஷ்ணன்!.. வட போச்சே!…

பெரும்பாலும் வில்லியாகவே நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தனது 25வது வயதிலேயே வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலுக்கேற்ப திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகு 4 வருடம் டெலிவிஷனுக்கு பிரேக் கொடுத்தாராம் கிருத்திகா.

அந்த இடைப்பட்ட காலத்திலேயே அவருக்கும் அவரது கணவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு கேஸ் கூட போய்க் கொண்டிருந்ததாம். அதனால் அவரது கணவரால் பிசினஸை கூட சரியாக கவனிக்க முடியவில்லையாம். அந்த நேரத்தில் சீரியலில் போய் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்க,

இதையும் படிங்க: கதையையே மாற்றிய உறியடி விஜய் குமார்!.. கிரேட் எஸ்கேப் ஆன அயோத்தி பட இயக்குனர்..

சன் டிவியில் ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அந்த நேரத்தில் கிருத்திகா 83 கிலோ எடை இருந்தாராம். இருந்தாலும் அந்த சீரியலுக்கு அக்கா கதாபாத்திரம் என்பதால் பரவாயில்லை என்று கூறிவிட்டார்களாம்.  இந்தப் பக்கம் கிருத்திகாவிற்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டிருக்க,

ஒரு கட்டத்தில் அவரது கணவர் கிருத்திகாவை பார்த்து ‘எப்படி இருக்க பாரு? பெரிசா இருக்க’ என அவரது உடல் எடையை வைத்தும் சண்டை போட ஆரம்பித்தாராம். அதன் பிறகே இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்திருக்கிறார்கள். தன் மகனை தன்னுடனேயே வைத்திருக்கிறார் கிருத்திகா. இப்பொழுது ஹீரோயினே தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என தனது  சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சைலைண்டா நடக்கும் வேலை!. பாகுபலி ரேஞ்சுக்கு உருவாகும் சிம்பு படம்!. சம்பவம் உறுதி..

Published by
Rohini

Recent Posts