Connect with us
simbu

Cinema News

சைலைண்டா நடக்கும் வேலை!. பாகுபலி ரேஞ்சுக்கு உருவாகும் சிம்பு படம்!. சம்பவம் உறுதி..

நடிகர் சிம்பு மற்ற நடிகர்களை போல கேப் விடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்கும் நடிகராக இருப்பதில்லை. அவரின் நடிப்பில் படம் வெளியாகி எட்டு மாதங்கள் முடிந்துவிட்டது. இதுவே வேறு நடிகராக இருந்தால் இரண்டு படங்களில் நடித்து முடித்திருப்பார். விஜய் கூட லியோ படம் முடிந்ததும் தளபதி 68 படத்தில் நடிக்க போய்விட்டார்.

பொதுவாக ஒரு படம் முடிந்ததும் சில மாதங்கள் இடைவெளி விடும் ரஜினி கூட சில நாட்களிலேயே வேட்டையன் படத்தில் நடிக்க போய்விட்டார். ஆனால், சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டு 10 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அதோடு, கடந்த பல மாதங்களாக இந்தியாவிலேயே இல்லை.

இதையும் படிங்க: பாதி படத்துல சம்பளத்தை ஏத்திக்கேட்ட சிம்பு!.. உருப்புடாம போனதுக்கு இதுவும் முக்கிய காரணம்…

அவ்வப்போது அவர் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள்தான் வெளியாகி வருகிறதே தவிர அவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக செய்திகளை காணவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படம் நடிப்பதாக செய்திகள் வெளியானது.

செய்தி வெளியானதோடு சரி. அதன்பின் ஒருவேலையும் நடக்கவில்லை. சிம்பு ரசிகர்களே விரக்தி அடைந்துவிட்டனர். ஆனால், உண்மையில் நடப்பது வேறாக இருக்கிறது. இந்த திரைப்படம் பாகுபலி படம் போல முழுக்க முழுக்க சரித்திர கதையை கொண்ட படமாம். அதிக பட்ஜெட் செலவழித்தால் மட்டுமே இயக்குனர் நினைத்தது திரையில் வரும்.

இதையும் படிங்க: தனுஷ் படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா!.. 50வது படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் சிம்பு…

அதேநேரம், சிம்புவை வைத்து பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கவும் முடியாது. எனவே, சரியான திட்டமிடலோடு படத்தை எடுக்க வேண்டும். எனவே, கேரி கேச்சர், பொம்மை, அனிமேஷன் என எல்லாவற்றையும் வைத்து முழு படத்தையையே இயக்குனர் உருவாக்கி வருகிறாராம். அப்படி உருவாக்கி பார்த்தால் எந்த இடத்தில் வி.எஃப்.எக்ஸ் வேண்டும், எந்த இடத்தில் செட் அமைக்க வேண்டும், எந்த இடத்தில் மினியேச்சர் தேவைப்படும் என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டால் படப்பிடிப்பு சிக்கலின்றி நடக்கும், பட்ஜெட்டும் அதிகரிக்காது என முடிவெடுத்துள்ளனராம். எனவே, படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளனராம்.

மொத்தத்தில் சிம்புவின் இந்த படம் அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என கணிக்கப்படுகிறது. இந்த கதையை தேசிங்கு பெரியசாமி ரஜினியிடன் சொல்லி சம்மதம் பெற்றார். ஆனால், இந்த கதையை அவர் சரியாக எடுப்பாரா என ரஜினி சந்தேகப்பட்டதால் அவரை கழட்டிவிட்டார். அதன்பின்னர் அதே கதையை கமலிடம் சொல்லி அவர் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காக்க வைத்த தனுஷ்.. சிம்பு பக்கம் போன வெற்றிமாறன்.. கடுப்பாகி சுள்ளான் செய்த வேலை!..

google news
Continue Reading

More in Cinema News

To Top