Connect with us
simbu

Cinema News

தனுஷ் படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா!.. 50வது படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் சிம்பு…

Actor Simbu: கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக சினிமாவை பற்றி எல்லாம் தெரிந்த ஒரு அற்புதமான கலைஞராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. அவருக்கு இருக்கும் திறமையை ஆரம்பத்தில் அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் சமீபகாலமாக அதற்கேற்ற முயற்சியை எடுத்து வருகிறார். ஆரம்பகால படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர் போக்குக்கு நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல் இருப்பது போன்ற காரணங்களால் தயாரிப்பாளர்கள் சிம்புவை அணுக தயங்கினார்கள்.

இதையும் படிங்க: 50 வருடங்களில் முறியடிக்கப்படாத சாதனை… இதை அப்போதே செய்து காட்டிய நடிகர் திலகம்…! என்ன படங்கள்னு தெரியுமா?

தக்க சமயத்தில் சிம்புவுக்கு ஜாக்பாட் அடித்த படமாக மாநாடு திரைப்படம் அமைந்தது.  மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததோடு அடுத்தடுத்து சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவும் சிம்புவுக்கு வாய்ப்பு வந்தது.

வெந்து தணிந்தது காடு , பத்து  தல போன்ற படங்கள் அவரின் நடிப்பிற்கு தீணி போட்ட படங்களாக அமைந்தது. இப்போது அவருடைய 48 வது படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை தேசிங்கு பெரிய சாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் நடிப்பில் நான் இயக்க வேண்டிய படம்.. தயாரிப்பு இந்த மாஸ் ஹீரோ தான்.. மிஸ்ஸானது இதனால் தான்.. அமீர் ஷாக்..!

அதற்கான வேலையில்தான் சிம்பு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக 49வது படத்தை யார் தயாரிக்கிறார்கள் என்பதெல்லாம் ஒரு தகவலும் இல்லை. ஆனால் சிம்புவின் 50வது படம் குறித்து ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது சிம்பு 50வது படத்தை அவரே  இயக்கி அவரே தயாரிக்கவும் செய்கிறாராம். அதனால்  அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று தெரிகிறது. இதே போல்தான் தனுஷும் அவருடைய 50வது படத்தை அவர்தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லோகேஷ்னாலே உள்ளே வந்திருவீங்களே! ‘ரஜினி 171’ல் எதுக்கும் வாய்ப்பில்லாமல் போச்சு – தலைவர்னா சும்மாவா?

google news
Continue Reading

More in Cinema News

To Top