Categories: Cinema News latest news

எனக்கே தெரியாது.. என்ன நடந்துச்சுனு! ‘ரோஜா’ சீரியல் நடிகை வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் குழப்பம்

Nalgar Priyanka:சன் டிவியில்  ‘ரோஜா’ என்ற சீரியல் மிகவும் பிரபலம் வாய்ந்த சீரியலாக இருந்து வந்தது.  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த சீரியலுக்காக காத்திருந்த காலமெல்லாம் நடந்திருக்கிறது. இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்தவர் நல்கர் பிரியங்கா. இதுதான் அவர் நடித்த முதல் சீரியல். முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டார் பிரியங்கா.

இப்போது ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதில் ஒரு காட்சியில் பிரியங்காவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு அவர் இறந்து விட்டதாக அந்த காட்சியில் காட்டப்பட்டது. அதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஒரு வேளை பிரியங்கா இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறாரோ என்ற ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read

இதையும் படிங்க: விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!.. பல நினைவுகள்!. ஃபீலிங்ஸ் காட்டும் நடிகர்!..

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நல்கர் பிரியங்கா அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த சீரியலில் இருந்து நான் விலகவில்லை. எனக்கான அடுத்த செட்யூலை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இப்படி  நடந்ததற்கான காரணம் கூடிய சீக்கிரம் உங்களுக்கு தெரிய வரும் என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் ஜீ தமிழில் மற்றும் ஒரு சீரியலில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அந்த சீரியலில் இருந்தும் பிரியங்கா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் போட்ட பதிவால் நளதமயந்தி சீரியலில் இருந்து அவர் விலகப்போவதில்லை என்பது அதிகாரப்பூர்வமாக தெரிகிறது. ப்ரோமோவில் பிரியங்காவுக்கு பிறகு அவருடைய சகோதரியாக ஸ்ரீநிதி நடிக்கும் கதாபாத்திரம் முன்னிலையில் காட்டப்படுகிறது. ஒருவேளை பிரியங்காவிற்கு பிறகு ஸ்ரீநிதி தான் அவருடைய ரோலை ஏற்று நடிப்பாரோ என்றெல்லாம் பல வதந்திகள் கிளம்பி வருகின்றன. வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது சீரியலில் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: இளையராஜாவை பார்த்து மிரண்டு போன ஜெயலலிதா! அம்மாவுக்கே ஜெர்க் காட்டிய இசைஞானி

Published by
Rohini