சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் உடன் ஆடிய சாய் சக்தியுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக, அந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறியவர் ஜூலி. ‘ஜோடி’ ஜூலி என பலரால் அறியப்பட்டு வருகிறார்.
இவர் நீண்ட வருடங்களாக சீரியல் உலகில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு சில சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா மற்றும் சித்திரம் பேசுதடி ஆகிய இரண்டு சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் ஒரு முன்னணி பத்திரிக்கை சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பல்வேறு திரைமறைவு விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதிலிருந்து, நான் சினிமாவிற்கு வந்த 25 வருடம் ஆகி விட்டது. அப்போது என்ன பிரச்சனை இருந்ததோ அதே பிரச்சனை தற்போதும் இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகளுக்கு வாய்ப்பு தற்போதும் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும், ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ என்கிற பிரச்சினை தற்போது சினிமாவை விட சீரியல் பக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும், ‘அது ரொம்ப சாதாரணம்’ என்கிற நிலைமை தற்போது இருக்கிறது.
இதையும் படியுங்களேன் – கமல் மானத்தை வாங்கிய காமெடி பிரபலம்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் அவமானப்பட்ட ஆண்டவர்.!
புதிதாக சின்னத்திரை உலகிற்குள் வருபவர்களுக்கு இப்படி அடஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். விரைவில் பிரபலம் ஆகி விடலாம். என்கிற அளவுக்கு இங்கு மனசை மாற்றும் வேலையும் நடக்கிறது. அதனால் புதிதாக வருபவர்களும் இதனை தெரிந்தே இதெல்லாம் தப்பில்லை என்கிற மாதிரி நினைத்து கொள்கிறார்கள். அதுதான் இங்கு வேதனைக்குரிய விஷயம்.
இவ்வாறு பலரும் பேச தயங்க கூடிய திரைமறைவு விஷயங்களை வெளிப்படையாக அந்த பேட்டியில் கூறிவிட்டு சென்றுவிட்டார் மூத்த சீரியல் நடிகை ‘ஜோடி’ ஜூலி.