Home News Reviews Throwback Television Gallery Gossips

நான் தூக்கி குளிப்பாட்டிய குழந்தை விஜய்! இப்போ பாக்க முடியாம கஷ்டப்படுறேன் – கண்கலங்கி பேசிய அந்த பிரபலம்

Published on: October 26, 2023
vijay
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று ஒட்டுமொத்த தமிழ் நாடே கொண்டாடும் நடிகராக ஒரு பக்கம் விஜய் இருக்க அவரை பார்க்க முடியாத வருத்தத்தில் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார் ஒரு பிரபலம்.

அவர் வேறு யாருமில்லை. விஜயின் சொந்த சித்தி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் அம்மாவாக நடித்த நடிகை ஷீலாதான் விஜயின் சித்தி. நடிகர் விக்ராந்தின் அம்மாதான் இந்த  ஷீலா. விஜய் பிறந்த போது ஷீலா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: அடுத்த ஆடு சிக்கிடுச்சு!.. லிப் லாக் முத்தத்துடன் புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலா பால்!..

விஜயை பெரும்பாலும் தூக்கி குளிப்பாட்டி வளர்த்தது  நான்தான் என்றும் என் அக்காவிடமோ என் அம்மாவிடமோ விஜய் இருக்கவே மாட்டான் என்றும் பெரும்பாலும் நான் தான் விஜய் கூடவே இருந்திருக்கிறேன் என்றும் ஷீலா கூறினார்.

ஆனால் காலங்கள் மாற மாற எல்லாம் மாறிவிட்டது என்றும் அதன் பிறகு பசங்களுக்கு திருமணமாகி அவரவர் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்றும் இப்போது விஜயை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் ஷீலா கூறினார்.

இதையும் படிங்க: ஐ யம் சாரி லோகேஷ்!.. கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்!. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்…

ஆனால் விஜயை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் விஜயை ரொம்பவும் மிஸ் பண்றேன் என்றும் ஷீலா கூறினார். அதுமட்டுமில்லாமல் விக்ராந்த் படமானாலும் சரி விஜய் படமானாலும் சரி படத்தை பார்த்து உடனடியாக தன்னுடைய கருத்தை ஓப்பனாக சொல்லிவிடுவேன் என்றும் கூறினார்.

இப்போது விஜய் எதிர்பார்க்காத உயரத்தை அடைந்து விட்டதால் அவரும் மிகவும் பிஸியாகி விட்டார் என்றும் விஜயை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது என்றும் ஷீலா கூறினார்.

இதையும் படிங்க: நைட் 10 மணிக்கு போன் பண்ணி டார்ச்சர்! பிரபல நடிகையிடம் இருந்து அமீரை காப்பாற்றிய தனுஷ்!