அந்த நேரத்தில் நடிகையுடன் இருந்த அர்னாவ்!.. இத கண்டிப்பா பண்ணத்தான் போறேன்!..சீரியல் நடிகை திவ்யா கண்ணீர் மல்க பேட்டி!..

Published on: October 8, 2022
divya_main_cine
---Advertisement---

சன் டிவியில் ஒளிப்பரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகி ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் நடிகர் அர்னாவ் மற்றும் நடிகை திவ்யா. வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் ஆயினும் காதலனுக்காக முஸ்லீமாக மதமாற்றம் செய்து பின் இருவரும் திருமணத்திற்கு தயாராகி இருக்கின்றனர். திருமணமாகி நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இப்போது பெருத்த சூறாவளி வீசுக்கொண்டிருக்கிறது.

divya1_cine

திருமணமாகி சில மாதங்களே ஆனாலும் திருமணத்திற்கு முன் 5 வருடங்கள் இருவரும் லிவ்விங் ரிலேசன்ஷிப்பில் தான் இருந்திருக்கின்றனர்.திருமணமாகி ஒரே மாதத்தில் திவ்யா கர்ப்பமாயிருக்கிறார். இப்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் திவ்யா. ஏற்கெனவே நடிகை திவ்யா திருமணமாகி ஒரு பெண் குழுந்தை இருக்கும் சமயத்தில் முதல் கணவரை விவாகரத்து செய்தவரும் கூட. எல்லாம் தெரிந்து தான் இவர்களது திருமணம் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆருக்கு திருமணம் ஒப்பந்தம் போட்ட மாமா… ஆத்திரத்தில் கத்திய ஜானகி…

divya2_cine

இந்த நிலையில் திவ்யா கர்ப்பமாக ஆனதில் இருந்து இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு இருக்க சண்டையும் வந்து கொண்டே இருந்திருக்கின்றது. மேலும் விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் செல்லமே தொடரில் கதாநாயகியாக இருக்கும் அனிஸ்தா என்ற பெண்ணுடன் அர்னாவ் நெருக்கமாக இருப்பதாக திவ்யா குற்றச்சாட்டு வைக்கிறார். அந்த தொடரில் அர்னாவ் தான் கதாநாயகன். இதை பற்றி அர்னாவிடம் கேட்டால் அனிஸ்தாவும் நானும் நல்ல நண்பர்கள் போல தான் பழகி வருகிறோம் என்றும் திவ்யா தான் என்னை அடிக்கடி செத்துருவேன், தாலி பக்கத்தில் கடிதம் எழுதி விட்டு என்னை ப்ளாக்மெயில் பண்ணிக் கொண்டும் இருக்கிறார் என்று அர்னாவ் கூறினார்.

divya3_cine

இதை ஒருவிதத்தில் ஒப்புக் கொள்ளும் திவ்யா ஏன் அப்படி செய்தேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார். செல்லமே தொடரின் படப்பிடிப்பு சமயத்தில் அர்னாவ் அனிஸ்தாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றாராம். படப்பிடிப்பில் இவர்களை தேட வெளியில் சென்றதை பார்த்த சிலர் இயக்குனரிடம் கூறியிருக்கின்றனர். அர்னாவ் வந்ததும் இதை பற்றி கேட்ட படக்குழு கோவத்தில் அர்னாவ் கேமரா முன்னாடி மண்ணை அள்ளி வீசி நீங்க நாசமா போயிருவீங்க என்றெல்லாம் கூறினாராம். இதை பார்த்த அர்னாவின் மேனேஜர் திவ்யாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க : பிக்பாஸ் பிரபலங்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட செல்ஃபி!..வைரலாகும் புகைப்படம்!..

divya4_cine

எந்த பெண்ணுக்கும் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் தனியாக சுற்றுவதை பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும். அததான் நானும் செய்தேன் என்று கூறினார். மேலும் அர்னாவ் இன்னொரு பக்கம் தான் என் மனைவியுடன் வாழ விரும்புவதாகவும் என் குழந்தைக்கு எதும் ஆகக்கூடாது எனவும் கூறிவரும் நிலையில் திவ்யா நான் கருக்கலைப்பு பண்ணப்போகிறேன் என்றும் கூறிவருகிறார். அர்த்தமில்லாத புரிதலால் உடலும் உயிருமாக இருந்த இரு ஜீவன்கள் இன்று நியாயத்திற்காக போராடி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.