Cinema History
சீரியலில் இருந்து இப்படி ஒரு ஜாக்பாட்டா? பிரபல இயக்குனருக்கு தயாரிப்பாளர் செய்த சூப்பர் சம்பவம்…
மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் வெள்ளித்திரையில் காமெடி கொண்டாட்டமாய் அறிமுகமான படம் எம்-மகன். குடும்பங்கள் கொண்டாடிய எம்-மகன் வாய்ப்புக்கு முக்கியமான காரணமே மெட்டி ஒலி சீரியல்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
கமல், தனுஷ் தொடங்கி ஹிப்ஹாப் ஆதி வரையிலான பல தலைமுறை ஹீரோக்களை வைத்தும் படங்கள் தயாரித்த தமிழின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம்தான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் படங்கள் மட்டுமல்ல தமிழ் சீரியல்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு காதல் கதையா? மனைவி தெரிஞ்சு என்ன பண்ணாங்க தெரியுமா?
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம், கல்யாணம், திருமகள் மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் மீனா என பல ஹிட் சீரியல்களைத் தயாரித்த அனுபவம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு உண்டு. அந்தவகையில் சத்யஜோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் சினிமாவை மட்டுமல்ல சீரியல்களையும் உற்றுநோக்கி வருபவர்.
அப்படி இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார். தமிழ் சீரியல் வரலாற்றில் தனித்த இடம்பிடித்த மெட்டி ஒலி சீரியலில் கதையின் போக்கையும் இயக்குநர் திருமுருகன் அதைக் கையாண்ட விதத்தையும் கவனித்திருக்கிறார் தியாகராஜன்.
சத்யஜோதி தியாகராஜன், ஒரு கட்டத்தில் இயக்குநர் திருமுருகனை சந்தித்து பாராட்டியிருக்கிறார். அத்தோடு, `நல்ல கதை இருந்தால் சொல்லுங்க. பண்ணலாம்’ என்றும் சொல்லியிருக்கிறார். அப்போதே ஒரு கதையைச் சொன்ன திருமுருகன், அதைத் திரைக்கதையாகத் தயார் செய்ய நேரமும் கேட்டிருக்கிறார். அப்படி திருமுருகன் தயார் செய்த திரைக்கதைதான் பரத் – நாசர் காம்பினேஷனில் வெளியான `எம் மகன்’ படம்.
இதையும் படிங்க: எதிர்பார்த்து நான் எதுவும் பண்ணலை… சிவா மூக்கை உடைத்த தனுஷ்… முடிச்சிவிட்டாரே!