பொன்னியின் செல்வனால் தமிழ் சினிமாவுக்கு வந்த சிக்கல்… இப்படி பண்ணிட்டாரே மணி சார்!!
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார் என பலரும் நடித்துள்ளனர். இணையம் முழுவது இத்திரைப்படத்தை குறித்த விவாதங்களை எங்கும் பார்க்கமுடிகிறது.
தமிழ் சினிமாவின் 60 வருட கனவுத் திரைப்படம் என்ற வகையில் பலரும் இத்திரைப்படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இத்திரைப்படம் தற்போது மாஸ் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் ஆனது. இதன் மூலம் “பொன்னியின் செல்வன்”, கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தின் வசூல் ரெக்கார்டை உடைத்துள்ளது. மேலும் வெளியான நான்கு நாட்களில் இத்திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ. 250 கோடிகளை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எனினும், “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அபார வெற்றியால் இந்த வாரம் வெளியாக வேண்டிய பல திரைப்படங்கள் தள்ளிப்போய் உள்ளன. அப்படி ரிலீஸ் தேதி தள்ளிப்போன திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பார்டர்
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கஸந்த்ரா ஆகியோரின் நடிப்பில் உருவான “பார்டர்” திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.
காஃபி வித் காதல்
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஆகியோரின் நடிப்பில் உருவான “காஃபி வித் காதல்” திரைப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
காசேதான் கடவுளடா
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த ஆகியோரின் நடிப்பில் உருவான “காசேதான் கடவுளடா” திரைப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ரீ
சுந்தர வடிவேலு இயக்கத்தில் பிரசாத் ஸ்ரீநிவாசன், காயத்ரி ரமா ஆகியோரின் நடிப்பில் உருவான “ரீ” திரைப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இத்திரைப்படங்கள் எல்லாம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.