Cinema History
ஒரே ராகம், வெவ்வேறு டெம்போ… 8 பாடல்களும் வேற லெவல்… அசத்திய இளையராஜா..!
இளையராஜா ‘இசைஞானி’ தான் என்பதற்கு அவரது பாடல்களே உதாரணம். குறிப்பாக ஒரே ராகத்தில் பல்வேறு பாடல்களைப் போட்டிருப்பார். இந்தப் பாடல்களின் சிறப்பு என்னன்னா ஒரு பாட்டோட பல்லவியைப் பாடிவிட்டு இன்னொரு பாட்டோடு சரணத்துக்குப் போய்விடலாம். அதே போல இன்னொரு பாட்டோட சரணத்தில் இருந்து வேறு பாடலின் பல்லவிக்குப் போய்விடலாம்.
கர்நாடக இசையைக் கத்துக்கப் போறவங்களுக்கு முதல்ல சொல்லிக் கொடுக்குற ராகம் மாயமாளவகௌளை தான். சோகம், மகிழ்ச்சி, பக்தி பரவசம், காதல்னு எல்லாவற்றையும் இந்த ராகத்தில் கொண்டு வர முடியும். இந்த ராகத்தில் இளையராஜா நாலஞ்சு பாட்டு கொடுத்துருப்பாரு.
முந்தானை முடிச்சு – தீபம்
Also read: 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே காதல்!.. இப்ப இன்னும் அதிகமா?!.. யாரப்பா சொல்றாங்க திரிஷா!…
ஒவ்வொரு பாட்டுமே ஒவ்வொரு ரகமாக இருக்கும். முந்தானை முடிச்சு படத்தில் ‘அந்தி வரும் நேரம்’ என்ற ஒரு காதல் பாடலை இந்த ராகத்தில் கொடுத்து இருப்பார். இந்தப் பாடலின் இடையே ‘சாமந்திப்பூக்கள் மலர்ந்தன இரு சந்தன தேர்கள் அசைந்தன….’ என்று இடையே ஒரு சரணத்தைப் பாடலாம். அது என்ன பாடல் என்றால் தீபம் படத்தில் வரும் ‘அந்தப்புரத்தில் ஒரு மகாராணி’ என்ற பாடல்.
மாப்பிள்ளை
இந்த சரணத்தைப் பாடியதும் மீண்டும ‘அந்தி வரும் நேரம்’ என்று ஆரம்பிக்கலாம். அதே போல ‘அந்தப்புரத்தில் ஒரு மகாராணி’ பாடலின் பல்லவியைப் பாடி விட்டு ‘முக்குளித்து முத்தெடுத்து சொக்கத் தங்க நூலெடுத்து…’ என்ற சரணத்தைப் பாடலாம். இது எந்தப் படம் என்றால் மாப்பிள்ளை படத்தில் வரும் ‘மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே’ பாடல். எப்படி எல்லாம் பாடலுக்குப் பாடல் தாவ முடிகிறது என்று பாருங்கள்.
கண் சிமிட்டும் நேரம்
இந்தப் பாடலில் இருந்தும் இன்னொரு பாடலுக்குப் போகலாம். ‘மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே…’ என்று பாடிவிட்டு ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்… ‘என்ற படத்தில் என்ற பாடலைப் பாடலாம். இது முதல் இரவு என்ற படத்தில் வரும் பாடல். இந்தப் பாடலில் இருந்து ‘விழிகளில் கோடி அபிநயம்’ என்ற பாடலுக்குத் தாவ முடியும். இது கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் வரக்கூடிய பாடல்.
பணக்காரன்
இந்தப் பாடலில் இருந்து நாம் இன்னொரு சோக பாட்டுக்குத் தாவ முடியும். ‘விழிகளில் கோடி அபிநயம்…. அம்மா வந்து சொன்னால் தான் அப்பாவின் பேர் தெரியுமடா’ என்ற சரணத்தைப் பாடலாம். இது ‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’ என்ற ரஜினி பட பாடல். இது பணக்காரன் படத்தில் வருகிறது. அதில் இருந்து ‘சொல்லால் அடித்த சுந்தரி’ என்ற பாடலுக்குப் போகலாம். இது சின்னக்கவுண்டர் படத்தில் வரக்கூடியது. இந்தப் பாடலில் இருந்து அப்படியே ‘அந்தி வரும் நேரம்’ பாடலுக்குப் போகலாம்.
காதல் பரிசு
Also read: உங்க டெடிகேஷனுக்கு அளவு இல்லையா ஐஸ்வர்யாஜி? ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டோம்
இந்தப் பாடலுக்குப் பிறகு ‘காம தேவன் ஆலயம்’ பாடலையும், ‘காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்’ என்ற பாடலையும் பாட முடியும். இதுநம்ம ஆளு (இது மட்டும் பாக்கியராஜ் இசை அமைத்தது), முந்தானை முடிச்சு, காதல் பரிசு பாடல்களுக்குள் போய்விட்டு மீண்டு வரலாம். மீண்டும் ஒரு சுற்று அந்தி வரும் நேரத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.
ஒரே ராகம் ஆனா வேறு வேறு டெம்போ, இசைக்கருவிகளை மாற்றிப் போட்டதால் இளையராஜா வெவ்வேறு ரசனையைத் தருகிறார். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.