கோட் படத்துல மோகனை வெறி பிடிச்ச மாதிரி அலையவிட்ட விஜய்...! ரன்னவுட் ஆகலன்னா ஓகே!
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன் நடிப்பில் வெளியாகும் படம் கோட். இது வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லரைப் பார்த்து அல்டிமேட்ஸ்டார் அஜீத்தேப் பாராட்டியுள்ளார். இந்தப் படம் குறித்து சில தகவல்களைப் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
மைக் மோகன் கோட் படத்தின் வில்லனாக வருகிறார். இவர் சமீபமாக நடித்த படமான ஹராவும் சரியாக ஓடல. இவர் எப்படி செட்டாவார் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி வழக்கமாக பயன்படுத்துற மாதிரி இல்லாமல் புதுசா ஒரு கேரக்டர்ல அவரைக் கொண்டு வரும்போது அது பெரிய அளவில் ரீச்சாகும். அது எல்லாருமே செய்யற முயற்சி. அதை வெங்கட்பிரபு சரியா செய்வாரு.
இதுக்கு முன்னாடி மாநாடு படத்துல ஒய்.ஜி.மகேந்திரனைக் கொண்டு வரும்போது இப்படித் தான் பேசினாங்க. அதுக்கு அப்புறம் அவர் வந்த காட்சிகள் எல்லாம் நல்லா ரீச்சானது. இந்தப் படத்திலும் அவர் நடிச்சிருக்காரு.
80களில் கொடிகட்டிப் பறந்த வெள்ளி விழா நாயகன் தான் மோகன். இவர் தான் இப்போ மார்க்கெட்லயே இல்லையே ஏன் இவரைப் போய் வில்லனா நடிக்க வச்சாங்கன்னு பேச்சு வருது. ஆனா விஜய் தான் அந்தக் கேரக்டர்ல மோகன் நடிச்சா நல்லாருக்கும்னு சொன்னாராம். அவரு சொன்னதுக்கு அப்புறம் மாற்றுக்கருத்தே இல்ல.
அவரு சொன்னா அது சரியாகத் தான் இருக்கும்னு எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அப்படித்தான் மோகன் படத்துல நடிச்சிருக்காரு. அவரும் சாதாரணமான நடிகர் கிடையாது. படத்துல இதுவரைக்கும் நிறைய பேரு காந்தி வேஷம் போட்டு பார்த்துருக்கேன். ஆனா பர்ஸ்ட் டைம் காந்தியே வேஷம் போட்டு பார்க்குறேன்னு மிரட்டியிருப்பாரு.
படத்துல விஜய் பேரு தான் காந்தி. அவருக்கும் மோகனுக்கும் ஒரு கட்டத்தில் மோதல் உண்டாகிறது. படத்தை ஜெமினிமேன் என்று ஒரு ஹாலிவுட் படத்தோட தழுவல்னும் சோசியல் மீடியாவுல சொல்றாங்க. அந்தப் படத்தின் சாயல் தான் இது என்றால் படம் நிச்சயமா ஹிட்டாகும்.
இன்னொன்னு சிஎஸ்கே படத்துல கனெக்டாகுது. ஒரு தடவை தோனியைப் பற்றி எல்லாம் பேசுறாங்க. கிரிக்கெட் கிரௌண்டக் காட்டுறாங்க. அது திருவனந்தபுரத்துல எடுத்துருக்காங்க. ஒருவேளை தோனி படத்துல நடிச்சிருந்தா நிச்சயம் இது பான் இண்டியா படமா ஆகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.