பாகுபலி கிட்ட கட்டப்பாவா மண்டியிட்ட ஷாருக்கானின் ஜவான்!.. அட்வான்ஸ் புக்கிங் இவ்ளோதானா!..

by Saranya M |   ( Updated:2023-09-06 08:14:02  )
பாகுபலி கிட்ட கட்டப்பாவா மண்டியிட்ட ஷாருக்கானின் ஜவான்!.. அட்வான்ஸ் புக்கிங் இவ்ளோதானா!..
X

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் பதான் திரைப்படத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட குறைவாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்கானின் ஜான் திரைப்படத்தில் அதிக அளவில் கோலிவுட் நடிகர்கள் நடித்திருப்பதே இதற்கு காரணம் என்றும் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அட்லி இயக்கியுள்ள நிலையில், நாயகியாக நயன்தாரா நயன்தாரா நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அடடே விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னாடியே ஃபைட் சீன் அப்டேட் வந்துடுச்சே!.. தல தாங்குவாரா?..

மேலும் பிரியாமணி, யோகி பாபு, அம்ரிதா ஐயர் தமிழ் சினிமா நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆனாலும் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் டிரைலர் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக அளவில் தூண்டியது. அதற்கு முன்பு வரை அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு பாலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவான் டிரைலரில் இயக்குனர் அட்லி பெரிய சம்பவம் செய்துள்ள நிலையில், அதிரடியாக டிக்கெட் புக்கிங் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடித்த வார்த்தை திரைப்படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் விட ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முந்தி உள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி தான்!.. அது உங்களுக்கு இல்லை எங்களுக்கு ராய் லக்‌ஷ்மி!..

ஆனால், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து இந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியான பதான் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் வசூலை விட திவான் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் குறைவு என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த முறையும் சாருக் கான் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் வசூலை முறியடிக்கவில்லை என்றும் அந்தப் படம் தான் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது என்றும் தற்போது மனோபாலா விஜயன் புதிய ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் பார்த்ததை விட மிக பிரம்மாண்ட வெற்றி அடைந்தால் நிச்சயம் வசூலில் பாகுபலி 2 படத்தை ஜவான் திரைப்படம் முந்த வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

Next Story