நடிகர் ஷாருக்கான் மகன் கைது?... அலேக்காக தூக்கிய போலீஸ்.....
பாலிவுட் தொடர்பான பார்ட்டி என்றாலே மது விருந்து, போதை மருந்து இவைகள் களை கட்டும். நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட பின், அவருக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததாக செய்திகள் வெளியானது. அதன்பின் போதை மருந்து தடுப்பு காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் சில நடிகர், நடிகைகள் சிக்கினர். தமிழ், மலையாளம் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியின் தங்கையும் சிக்கினார்.
இதையும் படிங்க : நாக சைதன்யாவுக்கு வேறு நடிகையுடன் காதல்? – விவாகரத்துக்கு காரணம் அதுதானா?..!
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் தற்போது போதை மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளார். மும்பை கடலில் ஒரு உல்லாச கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி சிலர் பார்ட்டி நடத்துவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே, மற்றொரு கப்பலில் அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது, கொகைன், ஹஷீஷ், எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட சில போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கு இருந்தவர் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் என தெரியவந்தது. குறிப்பாக, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அங்கு இருந்தார். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: சமந்தா – நாக சைதன்யா பிரிவிற்கு காரணம்.. கடுப்பாகி டுவிட் செய்த குஷ்பூ!
ஆனால், அவர் கைது இன்னும் செய்யப்படவில்லை. அவரின் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாருக்கான் மகன்
ஆர்யன் கானிடம் போலீசார் விசாரணை pic.twitter.com/RMcIX0mIVs— DON Updates (@DonUpdates_in) October 3, 2021