ஷாலினியோட கூட பொறந்தவங்களை பார்த்து இருப்பீங்க!.. அவங்க அம்மாவை பார்த்து இருக்கீங்களா.. இதோ பிக்!..

by Saranya M |   ( Updated:2024-04-14 22:16:32  )
ஷாலினியோட கூட பொறந்தவங்களை பார்த்து இருப்பீங்க!.. அவங்க அம்மாவை பார்த்து இருக்கீங்களா.. இதோ பிக்!..
X

நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை ஷாலினி தனது சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் சகோதரி ஷாம்லியுடன் அடிக்கடி வெளியே சுற்றும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டு வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால், இவர்கள் மூவரையும் பெற்ற அம்மாவை அதிகமாக ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், தனது அம்மாவின் பிறந்தநாளை நேற்று கொண்டாடிய ஷாலினி அஜித் அவருடன் ஒட்டுமொத்த குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இதிலும் அஜித் மிஸ் ஆகிட்டாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தளபதி 69 படத்தின் இயக்குநர் இவரா?.. கோட் பட தயாரிப்பாளர் எந்த லெஜண்டை சொல்லியிருக்காரு பாருங்க!..

1979ம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் தான் ஷாலினி. மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் சிறு வயதில் இருந்தே பேபி ஷாலினி என குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். இவரது தங்கையும் பேபி ஷாமிலியாக நடித்து பிரபலமானவர்.

நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமானார். காதல் வைரஸ் படத்தின் மூலம் 2002ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். கிரிவலம், நாளை, யுகா, தமிழகம், பெண் சிங்கம், திரெளபதி, ருத்ர தாண்டவம் மற்றும் சில நொடிகள் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், ரிச்சர்ட் ரிஷிக்கு சினிமாவில் இதுவரை ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: விஜய்யின் கோட் படம் பற்றிய கேள்வி.. கடுப்பான மோகன்.. ஹரா டீசர் விழாவில் வாக்குவாதம்!..

அம்மா ஆலிஸின் பிறந்தநாளை நேற்று ஷாலினி, ஷாமிலி மற்றும் ரிச்சர்ட் ரிஷி மூவரும் அனோஷ்கா மற்றும் ஆத்விக்குடன் இணைந்து கொண்டாடிய புகைப்படம் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் தனது டீமுடன் பைக் டூர் சென்றுள்ள நிலையில், மாமியார் பிறந்தநாள் விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை.

தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அஜித் குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என தெரிகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கூட விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு ஏதும் வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: சும்மா சும்மா போஸ்டர் விடும் சூர்யா!.. புத்தாண்டு அதுவுமா கடுப்பான ஃபேன்ஸ்?.. கங்குவா ரிலீஸ் எப்போ?

Next Story