More
Categories: Cinema News latest news

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகளை ட்ரை சைக்கிள் ஓட்ட வைத்த முத்தையா.!

கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் அவரை வைத்து ‘விருமன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.

ஷங்கரின் மகள் முதன் முதலாக இப்படத்தில் அறிமுகவாவதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது.மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

Advertising
Advertising

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு விருமனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நகர் புறத்தில் வாழ்ந்து வரும் ஷங்கரின் மகள் அதிதி இப்படத்தில் கிராம புற பெண்ணாக நடிக்கிறார். இது இவருக்கு புதுவித அனுபவம் அது மட்டும் இல்லங்க இந்த படத்தில் ட்ரை சைக்கிள் ஓட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் கதை உண்மையான கதை என இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார்.

ஒரு பிரமாண்ட இயக்குனரின் மகள் அறிமுகமாகும் திரைப்படம் என்றால் அது நகர்ப்புற பின்னணி கொண்ட திரைப்படமாக இருக்கும் என்கிற பிம்பத்தை உடைத்து ஷங்கரின் மகள் ஒரு பக்கா கிராமத்து பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளது கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan

Recent Posts