ஷங்கர் இவ்வளவு தூரம் இறங்கி வந்துட்டார்.! நீங்களும் வரலாமே சார்.!

Published on: February 22, 2022
---Advertisement---

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாரான திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படம் 3 வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. அதன் பிறகு கொரோனாவுக்கு முன்னர் ஒரு விபத்து, அதற்கு பிறகு கொரோனா என பல தடைகள் வந்து படத்திற்கு தடை போட்டது.

அதன் பின்னர், இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த பல நடிகர்கள் வேறு படத்தில் பிசியாகி விட்டனர். காஜல் திருமணம் செய்து கொண்டுவிட்டார். நடிகர் விவேக் இயற்கை எய்தினார். என பல காரணங்களால் இந்தியன் 2 திரைப்படம் தொடரமுடியாமல் இருக்கிறது.

இதையும் படியுங்களேன் – எல்லாத்தையும் உடைச்சி உண்மையை ரசிகர்களுக்கு சொல்லிடுங்க சிம்பு.!

இந்நிலையில், ஷங்கர் தற்போது இயக்கி வரும் ராம் சரண் படத்தை இன்னும் 50 நாட்களில் முடித்து விடுவாராம். அதன் பிறகு இந்தியன் 2 படத்தை முடிக்க எத்தனை நாள் தேவை, எந்தெந்த நடிகர்கள், தேவை, கால்ஷீட் விவரங்கள், தயாரிப்பு செலவு முதற்கொண்டு அனைத்தையும் விவரமாக டாகுமெண்ட் ரெடி செய்து தயாரிப்பு நிர்வாகத்துக்கு அனுப்பிவிட்டாராம்.

மேலும். குறித்த நேரத்தில் அனைத்தையும் தயார் செய்து கொடுத்துவிட்டால் ஒதுக்கிய பட்ஜெட்டை விட 20 சதவீதம் குறைத்து காட்டுகிறேன் எனும் அளவிற்க்கு சொல்லிவிட்டாராம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் இன்னும் செவி சாய்க்கவில்லையாம். கமலும் விக்ரம் ஷூட்டிங்கை முடித்து விட்டு, இந்தியன் 2 வர தயாராக தான் இருக்கிறாராம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment