இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகளின் நிலை என்ன? சர்ப்ரைஸ் தகவலை பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்…

by Arun Prasad |   ( Updated:2023-04-05 09:50:04  )
Indian 2
X

Indian 2

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.

சோக சம்பவம்

கடந்த 2020 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் நடந்த ஒரு விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இச்சம்பவம் சினிமாத் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிப்போனது. அதன் பின் கொரோனா ஊரடங்கும் வந்ததால் இத்திரைப்படம் டிராப் என்றே கூறப்பட்டிருந்தது.

மேலும் இத்திரைப்படத்தில் நடித்திருந்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்தனர். விவேக், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

விவேக் காட்சிகளின் நிலை என்ன?

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகளின் நிலை என்ன? அந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாராவது நடிக்க உள்ளார்களா? என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சித்ரா லட்சுமணன் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“இந்தியன் 2” திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகளை எல்லாம் அந்த படத்தில் பயன்படுத்த உள்ளதாக ஷங்கர் முடிவெடுத்துள்ளாராம். அவரது காட்சிகளை சில டெக்னிக்கல் டிரிக்குகளை பயன்படுத்தி மேட்ச் செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறாராம் ஷங்கர். ஆனால் அதற்கு மிகப்பெரிய பொருட்செலவு ஆகும் எனவும் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story