யாரு கேக் ஊட்டி விடுறாங்க பாருங்க!.. இந்த பர்த்டேவை சமுத்திரகனி மறக்கவே மாட்டார்.. ஏன் தெரியுமா?..

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வரும் நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பில் சமுத்திரகனியின் பிறந்தநாள் என்று கொண்டாடப்பட்டது.

கடந்த 2003-ம் ஆண்டு வெங்கட் பிரபு மற்றும் எஸ்பிபி சரண் நடிப்பில் வெளியான உன்னைச் சரணடைந்தேன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரக்கனி. கேப்டன் விஜயகாந்தை வைத்து இவர் இயக்கிய நெறஞ்ச மனசு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2009-ஆம் ஆண்டு சசிகுமாரை வைத்து நாடோடிகள் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

இதையும் படிங்க: அவரை பார்த்து இப்படி சொல்ல வேண்டுமா?!.. பாடகியை பார்த்து பயந்த எஸ்.பி.பி!..

தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோத சித்தம் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கியிருந்தார்.

சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி எடுத்த சமுத்திரகனி தொடர்ந்து ஈசன், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, மாசு என்கிற மாசிலாமணி, ரஜினி முருகன், விசாரணை, அப்பா, தொண்டன், ஆண் தேவதை, வடசென்னை, காப்பான், நாடோடிகள் 2, ஏலே, தலைவி, ரைட்டர், டான், துணிவு, ஆர்ஆர்ஆர் இந்த ஆண்டு வெளியான ஹனுமான் மற்றும் சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ரெண்டு படத்துல வாய்ப்பு போச்சி!.. வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கலாம் விஜய் சேதுபதி!…

மேலும் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது 51-வது பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். சமுத்திரகனியின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக கேக் ஏற்பாடு செய்த ஷங்கர் சமுத்திரக்கனிக்கு கேக் ஊட்டி விடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://twitter.com/thondankani/status/1783833264345768350

இன்று விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படத்திலும் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் ரத்னம் ரிலீஸ் மற்றும் ஷங்கர் படத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என இந்த ஆண்டு பிறந்தநாளை மறக்கவே மாட்டேன் என சமுத்திரக்கனி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜயால கண்ட கனவு எல்லாம் நாசமா போச்சே! கடுப்பில் விஷால்.. எங்க வந்து நிக்குது பாருங்க?