என்னோட சிவாஜி படம் உனக்கு புடிக்கலையா?.. சட்டென கேட்ட ஷங்கர்!.. லிங்குசாமி பதில் என்ன தெரியுமா?..

Published on: April 17, 2024
---Advertisement---

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேண்டுமென நினைத்து பல நாட்கள் போராடி உள்ளேன். என்னுடைய நண்பர் வசந்தபாலன் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார். சங்கர் குறித்து அவர் மூலமாக பல விஷயங்களை அறிந்து ஆச்சரியப்பட்டேன். அதன் பின்னர் ஷங்கருடன் நல்ல நட்பு எனக்கும் கிடைத்தது.

அவர் இயக்கத்தில் உருவாகும் எந்த ஒரு படமாக இருந்தாலும் அது பற்றி போன் செய்து சொல்லிவிடுவேன். அல்லது நேரில் பார்த்தாலும் என்னுடைய கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. தரம் வாய்ந்த படங்களை இயக்குவதற்கு அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அவர் பிரம்மாண்ட கமர்சியல் படங்களை எடுக்கும் இடத்தில் இருப்பதால் அதற்கு நேர்மையாக படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என லிங்குசாமி ஷங்கர் பற்றி பெருமையாக பேசி உள்ளார்.

இதையும் படிங்க: சீதாவா நடிச்சிட்டு இப்படி சீன் காட்டுறீயேம்மா!.. சமந்தாவை தொடர்ந்து இவரும் இப்படி இறங்கிட்டாரே!..

அந்நியன் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் கும்பகோணத்தில் லொகேஷன் பார்ப்பதற்கு என்னையும் கூட அழைத்து சென்றார். அவருடன் இருந்த அந்த மூன்று நாட்கள் என்னுடைய வாழ் நாட்களிலேயே மறக்க முடியாத அளவுக்கு சினிமாவைப் பற்றி பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

ஒரே கருத்துள்ள நபருடன் பயணிப்பது வேறு எந்த போதைக்கும் ஈடாகாத அளவுக்கு தரக்கூடிய விஷயம் என லிங்குசாமி ஷங்கருடன் தனக்கு கிடைத்த முதல் சந்திப்பை மறக்கவே முடியாது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நான் பாடி ரொம்ப நாள் ஆச்சு!.. லோகேஷ் கனகராஜ் இயக்குநர் இல்லை ஹீரோ!.. சின்மயி சொன்னதை கேளுங்க!..

சிவாஜி படம் ரிலீசான சமயத்தில் நான் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேனா எனக்கு தெரியவில்லை. சில நாட்கள் கழித்து ஷங்கர் சாரை சந்திக்கும்போது உனக்கு என்னோட சிவாஜி படம் பிடிக்கவில்லையா என சட்டென கேட்டுவிட்டார். அப்படி எல்லாம் இல்ல சார் நல்லா தான் இருந்தது என்றேன். இல்ல அந்த படம் உன்னோட டேஸ்டுக்கு இல்லை எனக்கு தெரிகிறது. இந்தியன், முதல்வன் போன்ற படங்களை பார்த்துவிட்டு நீ கொடுத்த விமர்சனம் அளவுக்கு இந்த படம் பற்றி நீ எதுவும் பேசாமல் இருப்பதை வைத்தே புரிந்துக் கொள்ள முடிகிறது.

இது சிக்ஸர், பவுண்டரி அடிக்க வேண்டிய களம். அதற்கு ஏற்றவாறு தான் படத்தை பண்ணியிருக்கேன் என அந்த படத்தை பற்றி நான் பேசாமல் விட்டதற்கு எனக்கு விளக்கம் கொடுத்தார் ஷங்கர் என லிங்குசாமி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தம்பி ஒரு விஷயம் சொல்லட்டுமா!.. பர்த்டேவுக்கு செம ட்ரீட் கொடுக்க ரெடியான சியான் விக்ரம்!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.