தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் ஷங்கர். ஜெண்டில்மேன் முதல் 2.O வரை அவர் இயக்கியது எல்லாமே அதிக பட்ஜெட் படங்கள்தான். அதன் மூலம் திரையில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் இயக்குனராகவே அவர் இருக்கிறார். இவர் இயக்கத்தில் நடிக்க அனைத்து நடிகர்களும் ஆசைப்படுவார்கள்.
தற்போது இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படம் என ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.O என மூன்று திரைப்படங்களை ஷங்கர் இயக்கியுள்ளார். மூன்றுமே வெற்றிப்படங்கள்தான். ரஜினிக்கு பிடித்தமான இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர்.
ஆனால், இதே ஷங்கர் ஒரு காலத்தில் ரஜினி மீது கோபமாக இருந்தார். அதாவது, ரஜினியை வைத்து படம் இயக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். முதல்வன் கதை தயாரான போது ரஜினியைத்தான் அணுகினார் ஷங்கர். ஆனால், அப்படத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டார். அதன்பின் சிவாஜி படத்தின் கதையை ஷங்கர் உருவாக்கிய போதும் சில காரணங்களால் ரஜினி அதில் நடிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த ஷங்கர் வைரமுத்துவிடம் ‘இனிமேல் ரஜினியே என் வீட்டிற்கு வந்து கேட்டால் கூட அவரை வைத்து படம் இயக்க மாட்டேன்’ எனக்கூறினாராம். இந்த வைரமுத்து ரஜினியிடம் கூறிவிட்டார்.
இது நடந்து சில மாதங்கள் கழித்து ஏவிஎம் சரவணனிடம் ரஜினி பேசிக்கொண்டிருந்த போது ‘சார் ஒரு பெரிய படம் ஒன்று செய்வோம்’ என ரஜினி கூறியுள்ளார். அதற்கு ஏவிஎம் சரவணன் ‘அதற்கு ஷங்கர்தான் வேண்டும்’ எனக்கூறியுள்ளார். அதற்கு ரஜினி ‘ஷங்கர் வாய்ப்பில்லை சார். அவர் என் மீது கோபமாக இருக்கிறார். என்னை வைத்து அவர் படம் இயக்க மாட்டார்’ என சொல்லியிருக்கிறார்.
அதற்கு சரவணன் ‘நான் பேசிப்பார்க்கிறேன்’ என சொல்ல ரஜினியோ ‘அதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவரிடம் கேட்டுப்பாருங்கள்’ என சொன்னாராம். ஏவிஎம் சரவணனே ஷங்கரிடம் பேசி அதன்பின் ரஜினியை வைத்து உருவான திரைப்படம்தான் சிவாஜி. ஆனால், ரஜினியோடு பழகிய பின் ஷங்கருக்கு ரஜினியை மிகவும் பிடித்துப்போனது. எனவே, அடுத்து எந்திரன், 2.O என மொத்தம் மூன்று திரைப்படங்களை அவரை வைத்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ஏவிஎம் சரவணனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: தரமான நெய்ல செஞ்ச உடம்பு!.. சைனிங் உடம்ப காட்டி சூடேத்தும் தேஜு அஸ்வினி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…
Malavika Mohanan:…