Cinema News
இவன்தான்டா அந்த ஹீரோ அடிங்கடா!.. விஜயகாந்தை துரத்திய ரசிகர்கள்!.. மகன் சொன்ன ஷாக்கிங் நியூஸ்..
Vijayakanth: திரையுலகமும் சரி.. ரசிகர்களும் சரி.. ஒருவரை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், ஏற்றுகொண்டுவிட்டால் தலைமேல் துக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவார்கள். இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். திரையுலகில் போட்டி பொறாமை என்பது எப்போதும் அதிகம்.
பின்னணியோடு ஒருவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்தால் வாய்ப்பு கிடைக்கும். அவர்களையும் துவக்கத்தில் அவமானப்படுத்துவார்கள். நடிகர் விஜய் முதல் படத்தில் நடித்தபோது அங்கிருந்தவர்கள் அடித்த கமெண்ட்டுகளை கேட்டு வீட்டுக்கு போய் அழுவாராம். நடிகர் ரஜினி கூட பல அவமானங்களை சந்தித்தவர்தான்.
இதையும் படிங்க: மூன்று நடிகர்களின் முகத்தில் கரியை பூசிய 2023!.. இமேஜ் டேமேஜ் ஆன எஸ்.கே..
அவ்வளவு ஏன்?.. 60களில் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆர் சந்திக்காத அவமானங்கள் கிடையாது. நடிகர் விஜயகாந்தும் அப்படித்தான்.. ‘இந்த மூஞ்சில என்ன இருக்குன்னு வாய்ப்பு கேட்குற?’.. ‘உனக்கு எதுக்கு சினிமா ஆசை?’.. என பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை நிராகரித்தனர்.
அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் கடுமையாக உழைத்து வாய்ப்புகளை பெற்று முன்னேறியவர்தான் விஜயகாந்த். இவர் நடித்த முதல் படமோ, இரண்டாவது படமோ மதுரையில் ஒரு தியேட்டரில் வெளியானது. படத்தை பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக விஜயகாந்த் தியேட்டர் வாசலில் நின்றிருந்தார்.
இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…
அவரை பார்த்த சிலர் ‘டேய் இவன்தான்டா அந்த ஹீரோ.. இவன அடிங்கடா’ என கத்தி அவரை விரட்டியுள்ளனர். அவர்களுக்கு பயந்து விஜயகாந்து ஓடினாராம். இதை அவரின் மகன் சண்முக பாண்டியனே ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார். அப்பாவுக்கு அழகான முகம் இல்லை.. கருப்பு நிறம்.. குரல் நன்றாக இல்லை.. தமிழே சரியாக பேசவரவில்லை.. மதுரை பாஷைதான் வருகிறது’ என சொன்னார்கள்.
என் அப்பா கடுமையாக பயிற்சிகள் எடுத்து எல்லாவற்றையும் சரி செய்தார். அதிகாலையில் கடற்கரைக்கு போய் உடற்பயிற்சிகள் செய்வார். கடுமையான உழைப்பு மற்றும் பயிற்சிக்கு பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்’ என சண்முக பாண்டியன் சொல்லியிருந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..