விஜய் இப்படிப்பட்டவரா? கான் நடிகர் பதிலால் அதிர்ந்த ரசிகர்கள்... என்னங்க இப்படி சொல்லிட்டீங்க

தமிழ் சினிமாவில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயிற்கு ஏகப்பட்ட பிரபலங்களும் பேனாக தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட விஜயினை குறித்த ஷாருக்கானின் பதில் தற்போதையை இணைய வைரலாக இருக்கிறது.
ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்பட்டு வரும் ஜவான் திரைப்படம் தமிழில் வெளியான பேரரசு படத்தின் காப்பி தான் புகார் தரப்பட்டுள்ளது.

ஜவான்
இந்நிலையில், ட்விட்டரில் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் "விஜய் குறித்து என்ன நினைக்கிறீர்கள். அவரும் நீங்களும் எப்போது இணைந்து நடிப்பீர்கள் எனக் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த ஷாருக், விஜய் ரொம்ப கூல்லான ஆள். நடக்கும் என்ற விதி இருக்கும் போது தான் படங்கள் நடக்கும். யாருக்கு வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் செய்வார்கள் எனக் குறிப்பிட்டு இருந்தார். ஜவான் படத்தில் விஜயும் கேமியோ ரோல் செய்வதாக தகவல்கள் கிசுகிசுப்பதும் குறிப்பிடத்தக்கது.