More
Categories: Cinema History Cinema News latest news

படப்பிடிப்புக்கு முன்னாடி எப்போதும் சிவாஜி அதை செய்வார்!… இப்படியும் ஒரு பழக்கமா?

தமிழில் உள்ள நடிகர்களிலேயே பெரும் நடிகராக பார்க்கப்படுபவர், நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன்.

அவர் வாழ்ந்த சமகாலத்தில் இந்திய சினிமாவில் அவருக்கு நிகரான ஒரு நடிகர் இல்லை என பலரும் கூறியுள்ளனர். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பு திறனை கொண்டவர் சிவாஜி கணேசன்.

Advertising
Advertising

பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவாஜி கணேசன், அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். வருடத்திற்கு 12க்கும் அதிகமான படங்களை நடித்து கொடுத்துள்ளார் சிவாஜி கணேசன்.

Sivaji Ganesan

அவர் வீட்டிற்கே போக மாட்டார் படப்பிடிப்பு தளத்தில்தான் தூங்குவார் என பலரும் கூறியுள்ளனர். அந்த அளவிற்கு 24 மணி நேரத்தில் 12 மணி நேரத்திற்கு அதிகமாக படங்களில் நடித்துதான் அவ்வளவு திரைப்படங்களை சிவாஜி கணேசன் கொடுத்தார்.

இருந்தாலும் சிவாஜிகணேசன் நடிப்பை ஓவர் ஆக்டிங், சிறப்பான நடிப்பு இல்லை என்று பலரும் விமர்சனம் செய்து உள்ளனர். இதற்கு சிறப்பான உதாரணம் ஒன்றை எஸ்.பி முத்துராமன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சிவாஜி கணேசனோடு எஸ் பி முத்துராமன் படம் இயக்கும்போது படத்தின் காட்சிகள் குறித்து முன்பே கேட்டுவிடுவார் சிவாஜி கணேசன். பிறகு அந்த காட்சியை மனப்பாடம் செய்து கொண்டு அதை எஸ்பி முத்துராமனிடம் இரண்டு மூன்று விதமாக நடித்துக் காட்டுவார் அதில் எந்த விதம் சரியாக இருக்கிறது என்று எஸ்.பி முத்துராமன் சொன்ன பிறகு அந்த விதத்தில் கடைசியாக கேமரா முன்பு நடிப்பார்.

அந்த அளவிற்கு பல விதங்களில் நடிக்க தெரிந்தவர் சிவாஜி கணேசன் என்பதை எஸ்.பி முத்துராமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பி.வாசுவுக்கு ஜோசியத்தில் அவ்வளவு நம்பிக்கையா?!.. சந்திரமுகி படத்தில் கூட எல்லாமே அப்படித்தான்!..

Published by
Rajkumar

Recent Posts